Monday, November 14, 2011

இந்தியப் பயணிகளுக்கு விசா கட்டணம் குறைப்பு: இலங்கை


இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை 10 அமெரிக்க டாலராக (ரூ.500) இலங்கை அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் வரும் ஜனவரி முதல் விதிக்க திட்டமிடப்பட்டிருந்த புதிய விசா கட்டணத்தை இலங்கை அரசு குறைத்துள்ளது.

எனினும் சார்க் அல்லாத நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு 20 அமெரிக்க டாலர் விசா கட்டணத்தை அந்நாட்டு அரசு நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு வந்த பின் விசா பெறும் நடைமுறையை மாற்றி, மின்னணு பயண அனுமதி முறையில் புதிய விசா வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய முறையின்படி இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கான கட்டணத்தை 50 அமெரிக்க டாலராக (ரூ.2500) உயர்த்த இலங்கை முடிவு செய்திருந்தது. இந்தக் கட்டணம் அதிகமாக உள்ளது என்றும், சார்க் நாடுகளுக்கு விசா கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கோரியிருந்ததாக இலங்கையின் குடியேற்றக் கட்டுப்பாட்டாளர் சுலநந்தா பெரேரா தெரிவித்தார்.

இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. கடந்த ஓர் ஆண்டில் இந்தியாவிலிருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும் மின்னணு பயண அனுமதி முறையிலிருந்து மாலத்தீவு, சிங்கப்பூர் நாடுகளுக்கு விலக்கு அளித்துள்ளது இலங்கை அரசு.

http://dinamani.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.