Tuesday, November 15, 2011

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வைகோ முயற்சிகள் வெற்றி பெறுமா?



நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய தொகுதியாகும். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பசாமியின் மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடக்க உள்ளது. சொந்த ஊரில் ம.தி.மு.க.,வின் பலத்தை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் வைகோ உள்ளார்.

தேர்தல் கமிஷன் அறிவிப்பிற்கு முன்னதாகவே இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடும் என அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார். நேற்று குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மைப்பாறையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைத்து கிராமங்களிலும் புதிய கிளைகள் அமைக்க உத்தரவிட்டார்.

நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: இடைத்தேர்தலில் பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம், மக்கள் நலப்பணியாளர்கள் வேலை நீக்கம், அண்ணா நூலகத்தை மாற்றியது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைப்போம்.

கொள்கைகளின் அடிப்படையில் வாக்களிக்கும் காலம் போயே போச்சு. அதிலும், சஙகரன் கோவில் ரிசர்வ் தொகுதி. போட்டியிடும் இரண்டு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களும் உறவினர்களாகவே இருப்பார்கள்.

மேலும் ஆளுங்கட்சியின் அமைச்சர் கருப்பசாமியின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நடக்கும் இடைத் தேர்தல் இது. அதனால் ஆளுங்கட்சியே வெற்றி பெறும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.