இனிமேல் சொகுசு பார்களில் வேலை செய்வோருக்கு அதிகமான டிப்ஸ் கிடைக்கக் கூடும். அதுவும் தனியார்வசம் கொடுக்கப்படுவதால் முதலாளிக்கும் ஒரு பங்கு கிடைக்கக் கூடும். சாதாரண பார்களில் வேலை பார்ப்பவர்களுக்குச் சங்கம் இருப்பதுபோல், சொகுசு பார்களில் வேல செய்பவர்களுக்கென்று தனிச் சஙகம் அமையக் கூடும்.
சொகுசுப் பார்களில் பணியாற்றக் குறைந்த பட்சத் தகுதி பட்டதாரியாக இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படலாம். பெண்களுக்கென்று சொகுசுப் பார்களில் தனி இடம் ஒதுக்கப் படக்கூடும். பெண் பணியாளர்கள் விநியொகிக்க வேண்டுமென்றால் தனிக் கட்டணம் வசூலிக்கலாம். அரசின் வருவாய் மேலும் கூடும்.
மகாகவி பாரதியார் மது என்னும் தலைப்பில் பாடியுள்ள 12பாடல்களில் தேவையானவற்றை மட்டும் “எடிட்” செய்து ”எலைட்” பார்களின் சுவற்றில் மாட்டலாம். இளைஞர்கள் குடிப்பதை நியாயப்படுத்திட பாரதியின் சில வரிகளையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
சென்னையில் வெளிநாட்டு உயர்ரக அரசு மதுபானக் கடைகள் அண்ணாநகர் சிந்தாமணி, ஸ்பென்சர் பிளாசா ஆகிய இரு இடங்களில் இயங்கி வருவது பலருக்கு இப்பொழுதுதான் தெரியவந்திருக்கும். மேலும் 20கடைகள் ஆரம்பிக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
எலைட் ஷாப்களில் அயல் நாட்டு மதுபானங்கள் மட்டுமே கிடைக்கும். ஆணும் பென்ணும் அச்சமின்றிக் குடிக்கலாம். களிபேருவகை கொள்ளலாம்.
புகை பிடிக்கத் தனி இடம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சொகுசு இருக்கைகள், மேஜைகள் போடப்படும்.
எனக்குத் தெரிந்த ஒருவர் சொல்லுவார், “ பெண் சமாச்சாரங்களையும், குடியையும் விலக்கிவிட்டு; ஒரு மனிதனை எடைபோடு; எல்லோரும் நல்லவரே” என்று. மாப்பிள்ளை பார்க்கும் பொழுது புகை பிடிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு கட்டத்தில்.இனி, குடிப்பது தகுதியாகக் கூடக் கருதப்படும். ஆனால், குடி குடியைக் கெடுக்கத்தான் செய்யும்.
கலைஞர் கடாமார்க் அறிமுகப் படுத்தியதிலிருந்து தலைமுறைகள் நாசமாகி வருகின்றன. மன வேறுபாடுகளால் மட்டுமல்ல உடல் கோளாறுகளாலும் ஏற்படும் மணமுறிவுகள், தற்கொலைகள், மனச் சிதைவுகளால் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ........அரசுக்கு வேண்டும் வருமானம்... வாழ்க தமிழகம்.
பாடம் என்றொரு மாத இதழ், சாராய சுனாமி என்றொரு டிவிடிஐ 75விலையில் தருகின்றது. குடிகாரர்களுக்குப் பரிசளியுங்கள். ஒருவராவது சுகப்படட்டும்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.