Saturday, November 19, 2011

மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன்









சவுல் டிரில் கோர்ட், மேயர் கோர்ட், ரெக்கார்டர் கோர்ட் என்ற பெயர்களில் எல்லாம்1600முதல் 1800வரை செயல்பட்டிருக்கின்றது.

சென்னையில் உச்சநீதிமன்றம் செயல்பட்ட காலமும் இருந்திருக்கின்றது. இன்ரைக்கு சென்னை சுஙவரி அலுவலகத்திற்கு அருகில் உள்ள ”மெரைன் யார்ட்” எனும் நீர் வழித் தளத்தில் அமைந்திருந்தது.

பின்னர், இன்றைக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அமைந்துள்ள சிஙாரவேலர் மாளிகையில்1817 முதல்1862 வரை செயல்பட்டு வந்தது..

1888ல் அரம்பிக்கப்பட்டு நான்காண்டுகால அளவில் இன்ற்ள்ள இடத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. Indo-Saracenic கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.

J.W. Brassington ஆரம்பிக்கப்பட்டு J.H. ஸ்டீபன்ஸ் துணையுடன் Henry Irwin
கட்டி முடிக்கப்பட்டது. 12ம்தேதி ஜூலை மாதம் 1892ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கியிருக்கின்றது. ஆனால் ஆகஸ்டு15ம்நாள் ஆண்டு1862தான் உயர்நீதி மன்றத்தின் முதல் நாள் என்பது விந்தையான ஒன்று. இவ்வகையில்150 ஆண்டுகள் ஆகின்றன.

மெட்ராஸ் உயர்நீதி மன்றக் கட்டுரையில் வழக்கறிஞர் ஜான் செல்வராஜ் ஜனசக்தியில் ஹைகோர்ட் அலங்காரச் சிந்து பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து பொள்ளாச்சி நசன் அண்ணாச்சியிடம் பேச நினைத்தேன். அதற்கு முன்பாக அலங்காரச் சிந்து என்று தமிழில் தட்டச்சு செய்தவுடன் கிடைத்துவிட்டது.

இதனை மின்னூலாக தமிழ் மரபு அறக்கட்டளை பாதுகாத்து வைத்துள்ளது.www.tamilheritage.org/old/text/ebook/highc/page1.ஹ்த்ம்ல்
டாக்டர் கண்ணன், மற்றும் சுபாஷிணி கனகசுந்தரம் முயற்சியால்தான் எனக்கு இந்த சிந்துவைப் பார்க்க முடிந்தது. மதராஸ் உயர்நீதிமன்றத் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மரபு அறக் கட்டளையின் அனுமதி பெற்று இதனை அச்சிட்டு இலவசமாக வழங்கலாம்.

இந்தக் கட்டிடத்த்தின் அழகில் மயங்கிய செஞ்சி ஏகாம்பர முதலியார் என்னும் தமிழ்க் கவிஞர் ஐகோர்ட்டின் அலங்காரச் சிந்து என்ற எட்டு பக்க கவிதைநூலைப் பாடியுள்ளார். “கண்டிடுவேன் ரெண்டாம் பாகம், காட்டிடுவேன் மதிவிநோதம்” என்று முதல் பாகத்தை முற்றிற்று என்று முடித்துள்ளார். மேற்கொண்டும் எழுதியுள்ளாரா என்பதைத் தேட வேண்டும். ஆனால், கட்டிட அழகில் ஈடுபாடு கொண்டு அதற்கு மட்டும் தனியாகக் கவிதை இயற்றிய முதற் கவிஞர் இவராகத்தான் இருக்கக்கூடும்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது மிக மிகச் சில கட்டிடங்களே மதராஸில் பாதிப்புக்குள்ளாயின. ஆனால் அச்ச உணர்வோடு சென்னையைக் காலி செய்தவர்கள் பலர்.

1914செப்டம்பர்24ல் மெட்ராசுக்கு எஸ்.எம்.எஸ். எம்டன் கப்பல் மூலம் வந்து ஜெஹிந்த் செண்பகராமன் புனித ஜார்ஜ் கோட்டையின் மீதும், உயர்நீதிமன்றத்தின் மீதும், துறைமுகத்தின் மீதும் குண்டுகளை வீசித் தாக்கினார். உயர் நீதிமன்றத்தின் எல்லைச் சுவற்றின் மீது குண்டு விழுந்த இடம் நினைவுச் சின்னமாக இன்றும் உள்ளது.

1877ல் மதராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக டி.முத்துசாமி ஐயர் நியமிக்கப்பட்டார். இவ்ரே நீதித் துறையின் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்று கூறப்படுகின்றது. ஆனால், 1686அரசர் JAMES II காலத்தில், 1690ல் அலிங்கல் பிள்ளை நீதித்துறையில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தகவலும் கிடைக்கின்றது.
http://www.hcmadras.tn.nic.in/lawday.pdf. சென்றால் பார்க்கலாம். அரசின் அதிகாரம் பெற்ற ஆளுநர் நியமித்துள்ளார். ( PENDING REGULAR APPOINTMENT FROM INGLAND)

பல்வேறு சுதந்திரப் போராட்ட வழக்குகள் இங்கு நடந்துள்ளன. வ.உ.சிதம்பரனார் வழக்கினை மட்டும் எடுத்துக் கொள்கின்றேன். நவம்பர்18 அவரது நினைவு நாள்.

உலகில் யாருக்குமே வழங்காதவாறு, வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. வழங்கியவர் நீதிபதி வாலிஸ். பிற்காலத்தில் வ.உ.சி.யின் நண்பராகவும் விளங்கினார். தண்டனையைக் குறைப்பதற்கும் உதவினார். பறிக்கப்பட்ட வழக்கறிஞர் பட்டத்தை மீட்டெடுக்கவும் உதவினார். எனவே, வ.உ.சி. தன் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

வ.உ.சி. எழுதிய உயில் குறித்துப் பதிவிட எண்ணினேன். அலங்காரச் சிந்து மெட்ராஸ் ஹைகோர்ட் பக்கம் அழைத்துச் சென்றது. அத்துடன் வ.உ.சி வழக்கை இணைத்துக் கொண்டேன்.










0 comments:

Post a Comment

Kindly post a comment.