Saturday, November 19, 2011

சூரியக் குடும்பத்தில் வேற்றுக் கிரகவாசிகள்!

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள்: விஞ்ஞானிகள் தகவல்

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும், அவர்களை நெருங்கிப் பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரியக் குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான ஆதாரங்களோ, அவர்கள் பூமியைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், இந்திய வம்சா வழி விஞ்ஞானி உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் சூரியக் குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாக நம்புகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இருவர் ஒபாமா நிர்வாகத்தின் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர்.

எங்களது ஆழமான விண்வெளி ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாசாவின் பயோனீர் மற்றும் வொயா ஜெர் விண்வெளி ஓடங்களை கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்தால் இது புலப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களின் இந்த கருத்தை “ஆக்டா” என்ற விண்வெளிக்கான அமைப்பு ஏற்றுக் கொண்டு அதன் இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளது.

ராக் எத்திக்ஸ் இன்ஸ்டியூட் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் ஹக் மிஸ்ரா, புவி மற்றும் சுற்றுச்சூழல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் ஆகியோரும், வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம் நமது சூரிய குடும்பத்தை சுற்றி வருவதை காண முடிகிறது. ஆனால் அதன் புறப்பகுதியை நெருங்கிச் சென்று பார்க்க முடியவில்லை.

இன்னும் ஆழமாகச் சென்று நுணுக்கமான முறையில் ஆராய்ச்சி செய்தால் வேற்றுக்கிரக வாசிகளை நெருங்கிச் சென்று பார்க்க முடியும் என்று அவர்கள் உறுதிப்படக் கூறி உள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.