http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35057 |
அதில், அவர்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது:
குறுஞ் செய்திகள் அனுப்பிய விஷமிகள் யார் எனத் தெரியவில்லை. அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையடக்க தொலைபேசி இலக்கம் கிடைத்தது என ஆச்சரியமாக உள்ளது.
மர்ம நபர்கள் பற்றி விசாரிக்க சைபர் கிரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக 2 பேரை பொலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மிரட்டலுக்கான காரணம் பொலிசாரின் விசாரணையில்தான் தெரிய வரும் என தெரிவித்தார்.
இதேவேளை பாகிஸ்தானின் தொலைதொடர்பு துறை, கையடக்க தொலைபேசி நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் உள்ள ஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறுஞ் செய்திகளில் அந்த வார்த்தைகளை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ___
|
0 comments:
Post a Comment
Kindly post a comment.