Monday, November 21, 2011

இந்தியாவில் அனைத்து ஜெயில்களிலும் இடநெருக்கடி!



திஹார் சிறைச்சாலை

இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலும் பெரியது திகார் சிறைச்சாலை. இங்கு6500 பேரை அடைத்திடவே இடமுண்டு, ஆனால் தற்போது உள்ளவர்கள்12500 பேர். வழக்குகளை விரந்து முடிப்பதற்காக சிறை வளாகத்திற்குள்ளேயே127 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு மட்டும்5150 வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும்1374 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் மூன்று லட்சம் பேர் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால் நான்கு லடசம் பேர் உள்ளனர்.

இவை சுகாதாரச் சீர்கேடு, கைதிகளுக்குள்ளே மோதல் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மூலகாரணமாகின்றன.

காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் சிறைச்சாலைகளைச் சீரமைக்க ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.