Monday, November 21, 2011

ஊர் கூடி இழுத்த பஸ்!

Location Details : Kochuthovala (കൊച്ചുതോവാള) is a small village about 4 km ... within Kattappana Grama Panchayat) in Idukki district, Kerala State, India. ...

சாலைகள் சேதமடைகின்றன. அதனால் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்படுகின்றன. பொதுவாக என்ன செய்வோம்? கிராமங்களாக இருந்தால் புலம்பலோடு சரி. நகரம், நகர்ப்புறங்களாக இருந்தால் உள்ளூர்ப் பேப்பர்களுக்குத் தகவல் கொடுப்போம். இன்னும் ஒரு படி மேலே சென்றால் பகுதியில் பிரபலமான தாய் மொழிப் பேப்பர்களுக்கும், ஆங்கிலப் பேப்பர்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாக்வோ தகவல் கொடுப்போம். கொடுப்பவர்களின் முக்கியத்துவத்தைக் கொடுத்துப் பிரசுரமாகும்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கொச்சிப்பனை அருகே உள்ளது கொச்சுதோவாளா என்ற ஊர்.

தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ரோடு சேதமடைந்ததைத் தொடர்ந்து பஸ்கள் இயக்குவதை நிறுத்திவிட்டனர்.

பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் கூட்டுறவு சங்கம் அமைத்தனர். பஸ் வாங்கினர். கொச்சு தோவாளா என்று பெயரிட்டனர். நேர்று முதல் பஸ் இயக்கப்பட்டது.

இடுக்கி மாவட்ட ஆட்சியர் தேவதாசன் இயக்கி வைத்தார். தன் கையே தனக்கு உதவி எனச் செயல்பட்ட கொச்சுதோவாளா ஊர் மக்களை மனதாரப் பாராட்டுவோம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.