Friday, November 25, 2011

உறையத் தொடங்கும் கடல் நீரும், விளைவுகளும் : பிபிசி வெளியிட்ட ஆச்சரியமான வீடியோ






ஆழமான கடல் நீர் பகுதி, உப்புநீர் கரைசலினால் பனிக்கட்டியாக உறைய தொடங்கும் போது

என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன? கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு உயிரிழக்கின்றன? என்பதனை நேரடியாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் முதன்முறையாக பிபிசி இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

'Brinicle' Forms எனப்படும் குறித்த நிகழ்வை, பிபிசி ஒளிப்பதிவாளர்கள், Hug Miller மற்றும் Doug Anderson ஆகியோர், அண்டார்ட்டிக்கா நிலப்பிரதேசத்தின், Razorkback தீவின் கடலுக்கடியில் படம்பிடித்துள்ளனர்.

டைம்ஸ் லேப் தொழில்நுட்பத்துடன் படம் பிடிக்க கூடிய விசேட கமெராகக்ளை கொண்டு கடலுக்கடியில் -2 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இக்காட்சிகள் மிகத்துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. 6 மணித்தியாலங்களில் இந்த மாற்றம் நிகழ்ந்ததாக இதை படம்பிடித்த ஒளிப்பதிவாளர்கள் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.