விக்கி பீடியாவில் தேடிப் பார்த்தால்,710-735 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கோச்சடையான் ரணதீரன் kochadaiyan ranadhiran என்னும் பாண்டிய மன்னனை பற்றிச் சொல்கிறது. அரிகேசரி மாறவர்மனின் மகன், கோச்சடையான். இப்பெயர் சிவ பெருமானையும் குறிக்கின்றது.
கோச்சடையான் சினிமாவைEROS நிறுவனத்துடன் இணைந்து MEDIA ONE இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது, ஆகஸ்ட் 2012 இப்படம் வெளியாக இருக்கிறது. AVATAR, TINTIN போன்ற படங்களுக்கு பயன்படுத்திய PERFORMANCE CAPTURE TECHNOLOGY-யை இப்படத்திற்கு பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த படத்திற்கு தான் இதனை பயன்படுத்த இருக்கிறார்கள்.
’கோச்சடையான்’ ரஜினியின் புது சினிமா kochadaiyan ரஜினியின் புதிய படம் இன்று அறிவிக்கப்பட்டது.படத்தின் பெயர் கோச்சடையான்.இயக்கம் செளந்தர்யா ரஜினிகாந்த்..திரைக்கதை வசனம் ;கே.எஸ்.ரவிக்குமார்..
இப்படம் 3D தொழில் நுட்பத்தில் தயாராகிறது. ராணா கைவிடப்பட்டது என்ற செய்திக்கு பதிலாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.ரவிகுமாரை சமாதானப்படுத்தும் விதமாக கதை,திரைக்கதை பொறுப்பு வழங்கப்பட்டிருக்ககூடும்.
ஜக்குபாய்,ராணா என இரண்டு படங்கள் டிராப் ஆனது அவருக்கு ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும்.ராணா வில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்,நடிகைகள் வேறு படங்களில் கவனம் செலுத்த துவங்கியவுடனே இது டிராப் படம் என தெரிந்துவிட்டது.
ஆனாலும் இன்னும் 3 மாதம் ரஜினி ஓய்வு எடுத்துக்கொண்டு தொடர்வார் என்றார்கள்.இப்போதும் ராணா தொடரும் என்றே சொல்கிறார்கள். அப்படித் தொடர்ந்தால் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.-
0 comments:
Post a Comment
Kindly post a comment.