ஐ.நா.வின் கூட்டுக் கண்காணிப்பு அமைப்பு (ஜேஐயூ) தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது. இத் தேர்தலில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஏ.கோபிநாதனும், இந்தியாவுக்கான சீன தூதர் ஷாங் யானும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 183 வாக்குகளில் ஏ.கோபிநாதன் 106 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஷாங் யான் 77 வாக்குகளைப் பெற்றார். பணி என்ன? ஐ.நா.வின் நிர்வாக, நிதிச் செயல்பாடுகளை மேம்படுத்தும் பணியை செய்கிறது இந்தக் கூட்டுக் கண்காணிப்பு அமைப்பு. ஐ.நா.வின் நிர்வாக, நிதிச் செயல்பாடுகள் குறித்து திடீர் சோதனை, ஆய்வு செய்ய இந்த அமைப்புக்கு தன்னிச்சையான முழு அதிகாரம் உண்டு.
ஐ.நா.வின் அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் கூட்டுக் கண்காணிப்பு அமைப்புத் தேர்தலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, இந்த அமைப்பில் 1968 முதல் 1977 வரை பதவி வகித்தது.
இந்த அமைப்பில் பதவி வகிக்கும் சீனாவின் பதவிக் காலம் டிசம்பர், 2012-ல் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து
ஜனவரி 1, 2013-ல் இந்தியப் பிரதிநிதி ஏ.கோபிநாதன் பதவியேற்றுக்கொள்வார். பொதுவாக இந்த அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருந்தாலும் மேலும் 5 ஆண்டுகள் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது வழக்கமாகவுள்ளது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகாலமாக சீனா பதவி வகித்து வருகிறது.
ஐ .நா. கண்காணிப்பு அமைப்பில் சீனா ஏற்கெனவே 10 ஆண்டுகள் பதவி வகித்து
விட்டதால் அந்நாடு மீண்டும் தேர்தலில் போட்டியிடாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சீனாவோ மீண்டும் போட்டியிட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தது. ஆனால் இதை உலக நாடுகள் அனுமதிக்கவில்லை. இந்தியாவை ஆதரித்து வெற்றி பெற வைத்துள்ளன.
இப்பதவியை வகிக்க இந்தியாவுக்கு எல்லாத் தகுதியும் உண்டு. இதை உலக நாடுகள் நன்கு அறியும். ஐ.நா. அமைப்பில் இந்தியாவின் செயல்பாடும், நிலைப்பாடும் போற்றக்கூடியதாக உள்ளது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது என்று ஐ.நா.வுக்கான த நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
Thursday, November 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.