Saturday, November 19, 2011

அந்தமான் பழங்குடியினர் மொழிகளின் முதல் அகராதி



அந்தமான் பழங்குடி மக்கள் பேசும் நான்கு மொழிகளுக்கு அகராதி ஒன்று முதன் முறையாகத் தற்போது தொகுக்கப்பட்டுள்ளது.

தொகுத்தவர், பிரிட்டனில் வாழும் மொழியியல் பேராசிரியையை, Anvita Abbi.
இவரது ஆறு ஆண்டுகால ஆய்வின் பலனாக இந்த அகராதி மொழி ஆர்வலர்களுக்குக் கிடைத்துள்ளது.

”தஙகளை ஆவணப்படுத்துவதற்க்காக கருத்தொருமித்து அழுது கொண்டிருக்கும் உலகின் தொன்மையான வார்த்தைகள் சில இந்த அகராதியில் இடம் பெற்றிருக்கின்றன” என்று இத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அந்தமானின் பழங்குடியினர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கக்கூடும். அவர்களது 70000ஆண்டுகள் பழமையானதாவும் இருக்கலாம்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள அந்தமான் தீவு ”மனிதவியலாளரின் கனவு” என்றும், உலகில் உள்ள பல மொழிகள் சங்கமிக்கும் இடம் என்றும் கூறப்படுகின்றது.


லண்டனில் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் (Soas) பள்ளி ஒரு Leverhulme பேராசிரியையாகத் திகழ்கின்றார்,
Abbi, . அந்தமானியர்கள் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள். எனவே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவது அவசியம் என்று கருதியதாகவும் கூறுகின்றார்.

"அகராதியில் தொகுக்கப்பட்ட வார்த்தைகள் ஒரு சமூகத்தின், பண்பாடு, தொன்மை, மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பண்டைய மற்றும் பாரம்பரிய அறிவு ஆகிவற்றை ஆவணப்படுத்தும் " என்பதும் அவரது கூற்றாக இருந்தது.

அந்தமான் பழங்குடி மக்களின் நான்கு மொழிகளிள் அகராதியில் இடம்பெற்றுள்ளன. இரண்டு மொழிகள் Bo மற்றும் Khora - அழிந்து வருகின்றன.

மற்ற இரண்டு மொழிகளில் Jeru
and Sare - சிறிதளவே பேசப்படுகின்றன.

பண்டைய Bo மொழி கடைசிப் பேச்சாளர் சுமார் 85 வயதில் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

ஆங்கிலம் மற்றும் இந்தியின் விரிவான மொழி பெயர்ப்புடன் வெளிவந்துள்ள அந்தமான் மொழி அகராதியை முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர், பிரிட்டன் பேராசிரியை , Anvita Abbi. என்பதுதான் உண்மை.


1 comments:

  1. Sri Sritharan kstharan1@hotmail.com to மின்தமிழ்

    show details 2:02 PM (23 hours ago)

    அந்தமானிய மொழிகளின் அகரமுதலி

    http://tawp.in/r/2tpu

    அன்புடன்
    சிறீதரன்

    விக்கிபீடியாவில் இடம்பெற்றுள செய்திகளை நண்பர் சிறீதரன் எழுதியுள்ளார். நன்றி.

    ReplyDelete

Kindly post a comment.