Monday, November 7, 2011

நேபாள ராணுவத்திற்கு சீனா நிதி உதவி !



நேபாள் ராணுவத்திற்கு 7.7 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனா- நேபாளம் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஏற்படுத்தும் விதமாக நேபாள நாட்டு இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சத்ரமான்சிங் கூரங், தலைமையிலான 6 பேர் கொண்ட குழு சீனா சென்றிருந்தது.. அங்கு சீன நாட்டு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் சீனா ராணுவ முகாம்களைப் பார்வையிட்டது..

அப்போது அந்நாட்டுடன் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து நேபாள நாட்டிற்கு சீனா 7.7 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி இராணுவத்திற்குத் தேவையான நவீன உபகரணங்கள் வழங்குவது, தலைநகர் காத்மாண்டுவின் சாச்சாவுனி நகரில் உள்ள பீரேந்திரா ராணுவ மருத்துவமனையின் தரத்தினை உயர்த்துவது என சீனா முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை சீன மத்திய ராணுவ கமிஷனர் ஜெனரல் சென்பிங்க்டே தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.