Monday, November 7, 2011

இங்கிலாந்தில் பக்கிங்காம் அருகே ரூ.1000 கோடிக்கு அரண்மனையை வாங்கிய இந்திய தொழில் அதிபர் இந்துஜா




இந்திய தொழில் அதிபர் இந்துஜா சகோதரர்கள், தங்களது வர்த்தக மற்றும் சொத்துக்களின் பரப்பு எல்லையை அதிகரித்துக் கொண்டே போகின்றனர். வெளிநாடுகளில் முதலீடுகள் செய்வதுடன் சொத்துக்களையும் வாங்கி குவிக்கின்றனர்.

பக்கிங்காம் ராணிக்கு சொந்தமான மேற்படி அரண்மனையை ரூ. ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

இந்த அரண்மனைக்கு அருகே மிகப்பெரிய பணக்காரர்களும், ஆலிவுட் நட்சத்திரங்களும் வகிக்கின்றனர். அரண்மனைச் சாலை என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய அரண்மனையைதான் இந்துஜா சகோதரர்கள் வாங்கியுள்ளனர்.

அரண்மனையைப் பல பகுதிகளாகப் பிரித்து அறைகளும், கூட்டமன்றம், ஆலோசனை கூடம் என்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்படிப் பிரித்துப் புதுப்பிக்க மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இந்துஜா சகோதரர்களான ஸ்ரீசந்த், கோபிசந்த் (இவர்கள் இருவரும் லண்டனில் வசிக்கின்றனர்), பிரகாஷ் மற்றும் அசோக் இருவரும் மும்பையில் உள்ளனர். நான்கு பேரின் வசதிக்காக அரண்மனை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும், நீச்சல்குளம், சினிமா ஹால், முற்றம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் இங்கிலாந்து கட்டிடக் கலை வல்லுனர்களுடன் இணைந்து அரண்மனையை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.