Monday, November 7, 2011

உயர் நீதீமன்றங்களில் 42.92 லட்சம் வழக்குகள் தேக்கம்:



:""உயர்நீதீமன்றங்கள் மற்றும் , நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது கவலை தரும் விஷயம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி கூறியுள்ளார்.

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் அகில இந்திய மாநாட்டில் நேற்று பேசிய அவர் மேலும் கூறியதாவது: நீதீமன்றங்கள் மற்றும் உயர்நீதீமன்றங்களில் குவியுமளவிற்கு உச்ச நீதீமன்றத்தில் வழக்குகள் குவியவில்லை.. அங்கு சமாளிக்கக் கூடிய அளவுக்கே, வழக்குகளின் எண்ணிக்கை உள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, கீழ் நீதீமன்றங்களில் 2.74 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில், உயர் நீதீமன்றங்களில் 42.92 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அக்டோபர் 31ம் தேதி வரை உச்ச நீதீமன்றத்தில் , 53 ஆயிரத்து 383 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றாக, தீர்ப்பாயங்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு தல்வீர் பண்டாரி கூறினார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற அமைச்சர் பவன்குமார் பன்சால் பேசுகையில், ""நீதீமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, மாற்று நிறுவனங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.

உச்ச நீதீமன்றம் மற்றும் உயர்நீதீமன்றங்களின் சுமையை அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடாது. மற்ற பதிலீட்டு நிறுவனங்களின் செயல்திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய நிர்வாக தீர்ப்பாயங்கள் இதற்கு உபயோகமாக இருக்கும்,'' என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.