Monday, November 7, 2011

11ஆண்டுகள் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தை முடித்தார், இரும்புப் பெண்மணி!



மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதம் இருந்த 'இரும்பு பெண்மணி' இரோம் சானு ஷர்மிளா இன்று தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை 11 ஆண்டுகள் பிறகு நிறைவுசெய்தார்

நவம்பர் 2, 2000 அன்று, இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அசாம் ஆயுதபடைப்பிரிவினர் 10 பேரை சுட்டு கொன்றனர் . இந்த சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர், ஷர்மிளா ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை ரத்து செய்ய கோரி, காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். சில முறை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டும் உணவு அருந்த மறுத்து விட்டார்.இரு முறை தற்கொலைக்கும் முயன்றார்.

இதனை தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் மூக்கு குழாய் மூலம் உட்செலுத்தப்பட்டது. உண்ணாவிரத போராட்டம்,தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமென மீண்டும் கைது செய்யப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்டது.

அவர் ஜாமீன் பெற வேண்டுமென்றால் உண்ணாவிரத்தை நிறுத்த வேண்டும் இல்லாவிடில் ஜாமீன் வழங்கப்படமாட்டது என நீதிமன்றம் தெரிவித்தது இதனை தொடர்ந்து தனது உண்ணாவிரத்தை 11 ஆண்டுகள் பிறகு முடிவு செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.