Tuesday, November 1, 2011

கேரளா பிறவி நாள் கொண்டாட்டம் !தமிழ் பிறவி நாள்?

http://shyniblog.blogspot.com/2011_10_01_archive.html?m=0

கேரளா பிறவி நாள் கொண்டாட்டம் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகின்றது.

அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


மலையாளிகள் புத்தாடைகள் அணிகின்றனர். மாநிலம் அமைந்த

நவம்பர் முதல் நாள் இவ்வாறு
கொண்டாடப்படுகின்றது. முதலில்

திருவிதாங்கூர். மலபார், கொச்சி என்று மூன்றாகப் பிரிந்திருந்தன.


கேரளா என்ற பெயர் அரசன் கேரள தம்பிரான் ன்ற பெயரிலிருந்து

எடுத்தாளப்பட்டது
. இந்த ஆண்டு55 வது பிறந்த தினம் கேரளாவிற்கு.

Kerala Piravi டே


Shyni ப்ளாக் என்ற வலைப்பூவிலிருந்து

இதே நாளில்தான் தமிழகமும் உதயமானது. வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை MPOSI.BLOGSPOT.COM பதிவில் பார்த்த நினைவு இருக்கின்றது. வேறு யாராவது எழுதியிருந்தால் தெரிவிக்கவும்.

திருவிதாங்கூர் எல்லைப் போராட்டம், பீர் மேடு பகுதிகளை இழந்தது, திருத்தணி போராட்டம் , இவற்றில் ஈடுபட்ட தலைவர்கள் ம.பொ.சி., நேசமணி, பி.எஸ். மணி உள்ளிட்ட செய்திகளை எல்லாம் மறந்துவிட்டோமா?

Real Estate Property Rates in Delhi Increased by 250%

மேற்படித் தகவலும் மேற்படி வலைப்பூவிலேயே உள்ளது, ஆங்கிலத்தில்.


1 comments:

  1. Innamburan Innamburan innamburan@gmail.com to mintamil, Innamburan
    show details 12:07 AM (15 hours ago)
    அன்றொரு நாள்: நவம்பர் 1: I & II
    இந்தியாவின் பல மாநிலங்களில் நவம்பர் 1 விடுமுறையும், விழாவாகவும் இருக்கும். கேரள பிறவி தினம்: நவம்பர் 1, 1956. இந்திய விடுதலை தினத்துக்கு முன் திருவிதாங்கூர், கொச்சின் சமஸ்தானங்களும், மலபார் மாகாணமும் இருந்த பிராந்தியம் +/- கொஞ்சம் கொடுக்கல் வாங்கல். அதே தினம் கன்னட ராஜ்யோத்ஸவம். அன்று ராஜ்யோத்ஸவ பரிசில்கள் அளிக்கப்படும். துவஜாரோகணம். கவர்னரும், முதல்வரும் உரை ஆற்றுவர். விழா & விடுமுறை. அதே தினம் ஆந்திரபிரதேசம் உதயமாயிற்று. மூன்று வருடங்களுக்கு சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து வந்த ஆந்திர மாநிலமும், மாஜி ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் தெலிங்கானா பிராந்தியங்களும் இந்த பிராந்தியத்தில் அடங்கின. 1969 லிருந்து ஜெய்-தெலிங்கானா இயக்கம் வலுத்து வருகிறது. தற்காலம் மும்முரமான பிரிவினை சக்திகள் இயங்குகின்றன. ஹரியானா மாநிலம் ஜனிக்கப்பட்ட தினம் நவம்பர் 1, 1966. தலைக்கு -அதாவது - சண்டிகர் நகரத்துக்கு தாவா. ‘உனக்கும் இல்லாமல், எனக்கும் இல்லாமல்’ அது மத்திய அரசின் குட்டி ராஜ்யமானது. 1986ல் பஞ்சாப் மாநிலத்துக்கு போயிருக்கவேண்டும், உடன்பாடுகள் படி. அது நடக்க வில்லை. மே 1960ல் உதயமான குஜராத் மாநிலம், மற்ற பிரிவினைகளை பற்றி இங்கு பேசப்படவில்லை. எனக்கென்னமோ, நவம்பர் முதல் தேதி உதறல் தேதி. இந்த மொழிவாரி இந்திய பாகப்பிரிவினை, பங்காளி கூறு, தாயாதி கட்டி புரளல் ஆகியவற்றுடன் எனக்கு ஒவ்வாமை. 1954 லிலியே பட்டி மன்றம் நடத்தியாகி விட்டது.

    ReplyDelete

Kindly post a comment.