Tuesday, November 15, 2011

நீரிழிவால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 5கோடி!

1995ஆண்டு 20லட்சமாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போழுது ஐந்து கோடியை எட்டிவிட்டதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சியூட்டியுள்ளது.

2025ல் இது 7கோடியாக உயரும் என்றும் எச்சரித்துள்ளது. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளது.

உலக அளவில் 346மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030ல் இது
இரு மடங்காகும் என்றும் கூறியுள்ளது.

ரத்தத்தில் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் சர்க்கரை கலந்திருப்பதே நீரிழிவு நோய் ஆகும்.

கணையத்தில் இன்சுலின் சுரப்பியின் செயல்பாடு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தாலும் சர்க்கரை அளவு கூடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு மாறுபாட்டாலும் சர்க்கரை வியாதி ஏற்படும்.

எனவே 30வயதைக் கடந்தவர்கள் சர்க்கரை நோய்ப் பரிசோதனையைக் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும்.

முறையான உணவு, உடற் பயிற்சி, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை சரியான விகிதத்தில் பயன்படுத்துதல் சர்க்கரை நோயாளிகளுடைய கடமையாகும்.

எப்படிப் பார்த்தாலும் வருமுன் காத்தலே சரியான மருந்து.

0 comments:

Post a Comment

Kindly post a comment.