Tuesday, November 15, 2011

பெட்ரோல் விலை 2 ரூபாய் 22 பைசா குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

கடந்த பெட்ரோல் விலை உயர்வின் போது, சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் ஒரு பேரல் வி‌லை 121 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தது. தற்போதைய அளவில் ஒரு பேரல் பெட்ரோல் விலை 115.8 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

அதேபோல், அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 50 என்ற அளவிலிருந்து ரூ. 49.20 என்ற அளவிற்குக் குறைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையைக் குறைக்க முன்வந்துள்ளன.

பெட்ரோல் விலை 2 ரூபாய 22 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து டில்லியில் பெட்ரோல் விலையில் 2 ரூபாய் 22 பைசா குறைக்கப்பட்டு ரூ.66.42 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

மும்பையில் 2 ரூபாய் 34 பைசா குறைக்கப்பட்டு ரூ.71.47 ஆக விற்கப்படும்.

கல்கத்தாவில் 2 ரூபாய் 31 பைசா குறைக்கப்பட்டு ரூ.70.84 என்ற அளவில் விற்பனை செய்யப்படும்.

சென்னையில் 2 ரூபாய் 35 பைசாவும் குறைக்கப்பட்டு ரூ.70.38 ‌ என்ற அளவில் விற்பனை செய்யப்படும்.

பெட்ரோல் விலை, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்பட்டதற்கு பின்னர் தற்போது முத‌ல் முறையாக குறைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.