Tuesday, November 15, 2011

நமது நாட்டில் 4நிமிடத்திற்கு ஒரு தற்கொலை!

தேசிய ஆவணக் காப்பகத்தின் கணக்கெடுப்பு கூறும் தகவல்களாவன:-

2010ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 34ஆயிரத்து 599பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் நாளொன்றுக்கு 368பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன்படி மணி ஒன்றுக்கு 15பேர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

தற்கொலை செய்து கொள்வோரில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள பெங்களூரூ, சென்னையில்தான் தற்கொலைகள் அதிகம். திருப்பூரிலும் அதிகம். 41சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் சுயதொழில் புரிந்தவர்கள். மொத்தத்தில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.

சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் மாணாக்கர்கள் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 26சதவிகித மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் அரைமணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கின்றார்.

எல்லோராலும், உளவியல் அறிஞர்களாலும் ஆலோசனைகளைத்தான் சொல்ல முடியும். மூல காரணிகளைத் தடுத்தாலன்றி தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட இயலுமா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.