Friday, November 18, 2011

சென்னையில் உள்ளன121 போலீஸ் பாய்ஸ் கிளப்புகள். 24எச்.சி.எல். பொறுப்பேற்றது.


Everything HCL

HCLHardware Compatibility லிஸ்ட்


எல்லாம் உண்டு எங்களிடம் என்று முழங்கும் எச்.சி.எல். நிறுவனம் ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் ஓர் அற்புத்ததை நிகழ்த்தியிருக்கின்றது. ஆம். எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த தனியார் நிறுவனமும் இத்தகையதோர் அறச்செயலில் ஈடுபடவில்லை. ஒருவேளை தற்காலிக உதவிகளை மேற்கொண்டிருக்கலாம்.

சேரிப்புறங்களச் சார்ந்த இளைஞர்களுக்கு வழிகாட்ட, சென்னை போலீஸ் கிளப்புடன் எச்.சி.எல். கைகோர்த்திருக்கின்றது.

சென்னை நகரில் இயங்கும்131 போலீஸ் பாய்ஸ் கிளப்புகளில், 24ஐ எச்.சி.எல். தத்து எடுத்திருக்கின்றது.

விளையாட்டுச் சாதனங்கள், கணினிகள் உட்பட்ட பலபொருள்கள் 24போலீஸ் பாய்ஸ் கிளப்புகளுக்கு எச்.சி.எல். நிறுவனத்தால் வழங்கப்பட்டன. மேலும் டீ ஷர்ட்ஸ்களும் வழங்கப்பட்டன.

போலீஸ் பாய்ஸ் கிளப்புகளில் சேர்ந்துள்ள சிறுவர்களுக்கும் , இளைஞர்களுக்கும் க்ணினிப் பயிற்சிகள், தொழிற் பயிற்சிகள், கோடைகாலப் பயிற்சிகள், ட்யூஷன், ஆளுமைத் திறன் வளர்ப்பு, திரமைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல் என பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டன. எச்.சி.எல். பணியாளர்களில் விரும்புவோரையும் இப்பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

எச்.சி.எல். நிறுவனத்தின் சார்பாக,பி.ரவிசங்கரன், தமயந்தி, ஆர்.கிருஷ்ணமூர்த்திராவ், மற்றும் அஸிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், பயிற்சி மற்றும் விரிவாக்கம், அஸிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட் ஃபைனான்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. ஸ்ரீமதி ரவிசங்கர் தலைமை வகித்தார்.

காவல் துறை அதிகாரிகள் திரிபாதி, சங்கர், எஸ்.என். சேஷாத்திரி , அஷோக் குமார், சுனில் குமார் சிங் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

காவல்துறை இவ்வாறு செயல்படுகின்றது என்பதே புதிய செய்தி. அரும்புவின் துணையுடன் துவங்கியுள்ளது இந்தச் செயல். பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பு உண்டா என்று தெரியவில்லை. செய்யும் வரை சிறப்பான போற்றத்தக்க செயல்தான். வாழ்க எல்லோரும்!

ஒரு மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக வாழ்வோர் இந்தியாவில் மிகமிகக் குறைவு. அதுவும் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் துவங்கி உலகமெங்கும் வெற்றிக்கொடி நாட்டி அத்தகையோரில் முன்னணியில் திகழும் எச்.சி.எல். நிறுவனர் குறித்த வலைத்தளம் எல்லோருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம். பார்த்துப் பயன் பெறுக.
http://www.shivnadar.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.