Friday, November 18, 2011

கன்னியாஸ்திரியை வெட்டிச் சாய்த்தது மஃபியா கும்பல், ஜார்கண்டில்!


வல்சாஜான் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். 1984ல் . கன்னியாஸ்திரி ஆனார். முதலில் கொச்சியில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாகப் பணியாற்றினார். பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்ய விரும்பினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வளம் நிறைந்த தும்கா பகுதிக்குச் சென்றார். அங்கு கடந்த 20ஆண்டுகளாகப் பழங்குடி மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டும், போராடியும் வந்தார்.

நிலக்கரி மாஃபியா கும்பல் பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து விரட்டிவிட்டது. இதை எதிர்த்துப் போராடி வந்தார் , வல்சா ஜான். சட்டப் படிப்புப் படித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழங்குடி மக்களை அடக்க முடிந்த மஃபியா கும்பலால், இவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகாலை இரண்டு மணிக்கு வெட்டிச் சாய்த்தது ம்ஃபியா கும்பல். பாகூர் மாவட்டம் பச்வாரா கிராமத்தில் நேறு முன்தினம் இந்த சோக நிகழ்வு நிகழ்ந்தது.

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்லிவந்ததிருப்பதைச் சோகத்துடன் நினைவு கூர்கின்றார், இவரது மூத்த சகோதரர், எம்.ஜே.பேபி. சிபு சோரன், ஸ்டீப மாரண்டி ஆகியோருக்கும் தனது நிலையை எடுத்துக் கூறியுள்ளார், வல்சா ஜான்.

மஃபியா கும்பல் தருவதாகச் சொன்ன பணத்தை வாங்கிக்கொண்டு மவுனித்திருந்தால் வல்சா உயிர் பிழைத்திருப்பார். ஆனால், உண்மைக்காகப் பாடுபட்ட காரணத்தால் உயிரைப் பறிகொடுத்தார். இந்தியா, காந்தியின் தேசம் என்பது இன்றும் நிரூபணமாயிருக்கின்றது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.