Monday, October 31, 2011

இங்கிலாந்தில் ஒயின் குடிக்கும் குழந்தைகள்




இங்கிலாந்தில் மது பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மது அடிமைகளாகி வருகின்றனர். அவர்கள் இளம் வயதிலேயே ஒயின் குடிக்க பழகுகின்றனர். பின்னர் படிப்படியாக பிராந்தி, விஸ்கி போன்றவற்றை அருந்துகின்றனர்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வாரத்துக்கு சராசரியாக 19 கோப்பை ஒயின் குடிக்கின்றனர். அவர்களில் 4 சதவீதம் பேர் வாரத்துக்கு 28 கோப்பைக்கும் அதிகமாக குடிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இதனால் குழந்தைகளுக்கு போதிய தூக்கம் கிடைப்பதில்லை. எனவே அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் பாடத்தை கவனிக்க முடியாமல் தூங்கி வழிகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுமிகள். இந்த தகவல் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் மதுவுக்கு அடிமை ஆவதை தடுக்க இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.