Monday, October 31, 2011

மூலதனம்45 கோடி. வரவு265 கோடி மத்திய ரயில்வேயை எதிர்த்துப் பயணி போர்க்கொடி!




மும்பையில் உள்ளதொரு துறைமுக வழிப் பாலம். VASHI-MANKHURD

45கோடி செலவில் உருவாக்கப்பட்டது. 1992முதல் மக்கள் பயன்பாட்டுக்கு

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயணிக்கின்றனர்.

முதல்வகுப்பு பயணச்சீட்டுக்கு உபரிக் கட்டணமாக இரண்டு ரூபாயும்,

இரண்டாம் வகுப்புப் பயணச் சீட்டுக்கு உபரிக் கட்டணமாக ரூபாய்

ஒன்றும்௧௯௯௨ முதல் வசூலிக்கப்பட்டு வருகின்றது. நகரம் மற்றும் தொழில்

முன்னேற்றக் கழகமும், மத்திய ரயில்வே நிர்வாகமும், இந்த உபரித்

தொகையைப் பங்கிட்டுக் கொள்கின்றன. இன்றளவும்265 கோடிக்கும்

மேல் வசூலிக்கப்பட்டு விட்டது.



என்? எதற்கு ? என்று கேள்வி கேட்கத் தெரிந்த பயணி ஒருவர் மத்திய ரயிவே

நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். இது நியாயம் அல்ல என்று. முடிவு

தெரிய இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகுமோ ?


கடிதம் எழுதிய மும்பை நண்பரின் பெயர் அனில் கல்க்லி. நண்பரின்

துணிச்சலைப் போற்றுவோம். வெற்றி பெற வாழ்த்துவோம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.