Monday, October 31, 2011

குமுதத்தில் சுஜாதா ”ரத்தம் ஒரே நிறம்” எழுதத் துவங்கிட காரண கர்த்தா!
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html


இவரது பெயர் ரத்னவேல். இவர்களது பூர்விகம் சிவகாசி. படிப்பு SSLC. படிக்காத மேதை காமராஜர் காலத்தில் இலவசக் கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது என்று உண்மையை உரக்கச் சொல்கின்றார்.

(ஏனெனில்1948-50களில் பிறந்தோர் பள்ளிக்கூடம் சென்று படித்திடக் காரணம் காமராஜர்தான் என்பது எவராலும் மறுத்திட இயலாத உண்மை. மாணக்கரின் வருகை குறைந்திடக் காரணம் அவர்கள் குடும்பக் கஷ்டத்தால் வேலைக்குச் செல்வதுதான் என்பதைக் கண்டறிந்த காமராஜர் கொண்டுவந்ததுதான் மதிய உணவுத் திட்டம். காமராஜருக்குத் துணையாய்த் திகழ்ந்தவர், நெ.து.சுந்தரவடிவேலு. அதிர்ஷ்டவசமாக சென்னையில் இந்திய சோவியத் கலாசாரக் கழகப்பணிகளில் அவரோடு பழகிடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதில் பெரு மகிழ்வு கொள்கின்றேன்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினம் எஸ். தெய்வநாயகம் என்ற எஸ்.டி.நாயகம், தினப் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதன் மூலம் மாணாக்கரைத் திரட்டினார். உணவு, உடை, உறையுள், கல்வி அனைத்தும் இலவசமாகக் கொடுத்தார். சிலருக்கு விதவை மறுமணமும் செய்து வைத்தார். குலசைப் பள்ளிகள் உள்ளன. தற்போதைய நடைமுறை தெரியவில்லை. சென்னை தியாகராய நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள ஆண்கள் மற்றும் குண்டூர் சுப்பையாப்பிள்ளை மகளிர் மேனிலைப் பள்ளியும் அவர் துவங்கியதுதான். பெரியாரின் வலக்கரமாகத் திகழ்ந்தவர். இவரது மரணத்தின் போது விடுதலை அலுவலகம் மூடப்பட்டது. அடுத்த விடுதலைப் பதிப்பில் இவரைப்பற்றிய செய்திகளே நிறைந்திருந்தன. )

இவருக்கு மூன்று பையன்கள். அனைவரும் இவரது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணினிப் பொறியாளர்களாக பணிகின்றனர். இருவருக்குத் திருமணமாகிவிட்டது. சென்னையில் இருக்கின்றனர். மூன்றாவது மகன் நியுஜெர்சியில் கணிப் பொறியாளராகப் பணியாற்றி வருகின்றார்.

தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் இவரை அணுகலாம். அனைத்துத் துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகர்.

திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு இவர் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் இவருக்குத் தனிப் பெருமை. (பல்வேறு எதிர்ப்புகளால் சுஜாதா சில (?) வாரங்களுக்குப்பின் தொடர்ந்து எழுதவில்லை)

இவருக்குப் பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். - ( ஜீவானந்தம், ம.பொ.சி., முத்துராமலிங்கத்தேவர் போனற்றோரைக் குறிப்பிட மறந்தது/மறுப்பது ஏனோ?)

இவரது கொள்கைமுடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavelnatarajan@gmail.com 94434 27128

எண்ணூறுக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை விரும்பிப் படித்து வருகின்றார். எப்படி நேரம் ஒதுக்கிட முடிகின்றது என்பது வியப்பினைத் தருகின்றது. இவரது சுய அறிமுகப் பகுதியிலிருந்தே இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டன.

60வயதுக்கும் மேற்பட்ட தமிழ்வலைப்பதிவர்களை ஓரிடத்தில் சந்திக்கும் முயற்சியில் ஈடுபடலாமா என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

அண்மையில் இவர் பதிவு செய்த சித்தர்கள் வாழும் சதுரகிரி மலை குறித்த படைப்பு பெரிதும் என்னைக் கவர்ந்தது. அதனைப் படித்திடச் செல்ல வேண்டிய ரத்னவேலின் முகவரி இதோ கீழே!

http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

2 comments:

  1. சுஜாதா சில வாரங்களுக்குப் பின் எழுதாதது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தொடர். அதற்குத்தான் நாடார்கள் சரித்திரம் புத்தகம் ரெபரன்ஸ். ‘ரத்தம் ஒரே நிறம்’ முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட புத்தகம்தான். இந்த ஒரு தகவல் தவிர உங்கள் பதிவு அருமை.

    ReplyDelete
  2. மிக்க நன்றி.
    உங்கள் அன்பால் நெகிழ்ந்து விட்டேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Kindly post a comment.