Monday, October 31, 2011

கள் மீதான தடை நீக்கப்படுமா? நடைப்பயணம்?





பனை, தென்னை மரங்களைப் பாதுகாக்கக் கோரி, வரும் ஜனவரி மாதத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப்பயணம் மேற்கொள்வது என்று தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கள் இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்குக் கொள்கை அமல்படுத்தப்படும்வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மது வகைகளை பனை, தென்னை பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும். இவற்றை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்தினால் தமிழகத்துக்குக் கூடுதலாக அந்நியச் செலவாணி கிடைக்கும்.

கள் உணவின் ஒரு பகுதி என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கருத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது கள் மீதான தடை நீக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் கள் மீதான தடையை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள் தொடர்பாக ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவாதக் கூட்டத்தில் குமரிஅனந்தன் களைவது கொள்ளவில்லை. ஆனால் ல் கள்ளைப் பற்றி விமர்சித்து வருகிறார். வரும் நவம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெறும் விவாதக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.