Monday, October 31, 2011

சென்னை ரெங்கநாதன் தெருவில் விதிமீறிய 50 கட்டடங்களுக்கு சீல்




விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு இன்று அதிகாலை சென்னை ‌மாநகராட்சி மற்றும்( சி.எம்.டி.ஏ.) சென்னைப் பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை, தி.நகரில், விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு, "சீல்' சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை ஐகோர்ட் கடந்த, 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது.


இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால், இந்த நடவடிக்கை முடங்கியது. அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து, தற்போது, இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இந்த கட்டடங்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப, கண்காணிப்பு குழு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதில், 36 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

இதையடுத்து, இந்த வணிக வளாகங்களை சீல் வைக்கும் நடவடிக்கையை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மாதம் வரை எடுக்காததால், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின் வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகள் மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என, சென்னை ஐகோர்ட் சில வாரங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், இதுதொடர்பான விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம், சி.எம்.டி.ஏ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தி.நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு,"சீல்' வைக்கும் நடவடிக்கையை இன்று காலை மேற்கொண்டனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.