Sunday, October 30, 2011

நவம்பர் மாதம் நாவல் மாதம்


NaNoWriMoஆண்டிற்கொரு முறை இந்த அமைப்பு நவம்பர் மாதத்தை நாவல் எழுதும் மாதமாகக் கொண்டாடுகின்றது.பதினேழு வயதுக்குட்பட்டவர்களை ஒரு பிரிவாகவும், மற்றவர்களை இன்னொரு பிரிவாகவும் பிரித்து போட்டியை நிகழ்த்தி உலகம் முழுவதிலும் உள்ள படைப்பாளிகளை ஒருங்கிணைக்கின்றது.




நவம்பர் முதல் தேதி இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம்பர்25ம் தேதி முதல்30ம்தேதிக்குள் எழுதியதை இணையத்தில் பதிவு செய்திடல் வேண்டும்.50000ம் வார்த்தைகள் அல்லது மேற்பட்ட அளவில் பெரியவர்கள் எழுதிட வேண்டியது கட்டாயம். இளைஞர்களுக்கு சலுகை உண்டு. இதற்கு முன்னர் எழுதிய படைபுக்களிலிருந்து எந்த ஒரு பகுதியும் இந்த நவம்பர் மாத நாவலில் இடம்பெற்று விடக் கூடாது.

சென்ற ஆண்டு இரண்டு லட்சம் பெரியவர்களும்,41000ம் இளைஞர்களும் பங்கேற்றனர்.37500க்கும் மேற்பட்டோர்50000த்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார்750பக்கங்கள்.


17வயதுக்குட்பட்டோருக்கு இன்னும் எண்ணிறந்த வாய்ப்புக்களையும் வசதிகளையும் பயிற்சிகளையும் இலவசமாகத் தருகின்றது இந்த அமெரிக்க அமைப்பு. அனைத்துலகம் என்று சொல்லிவிட்டு அமெரிக்கவில் உள்ளோருக்கு மட்டுமே உதவுவதாகத் தெரிகின்றது. நாவலை எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்றும் தெரிகின்றது.

இபடி ஒரு அமைப்பு இருப்பது நம்ம ஊர் நாராயணனை, திணமணி ந,ஜீவா பேட்டிகண்டு, தினமணியில் பிரசுரமானபின்தான் தெரிகின்றது. ஆடிட்டர் நாராயணன் அதிர்ஷ்டசாலி. நகைச்சுவை ததும்ப அவர் எழுதிய ஆங்கில நாவலுக்குப் பரிசு கிடைத்துள்ளது. ஆறு மாத காலத்தில் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவார்கள். நாராயணனுக்கு நூல் தற்பொழுது வந்துள்ளதால்தான் தினமணியின் மூலம் தெரியவந்துள்ளது. எந்த மொழியில் எழுதினாலும் தேர்ந்தேடுக்கப்பட்ட நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.

நேர வித்தியாசத்தால் இந்த ஆண்டு எல்லோரும் இதனைப் பயன்படுத்துவது கடினம் என்றே கருதுகின்றேன். திறமை உடையோர் அடுத்த ஆண்டிற்கு இப்பொழுதே தயாராகுங்கள். நாராயணனின் படமும் நூலின் பெயரும் கீழே உள்ளது. தினமணிக்கும், ந.ஜீவாவிற்கும் நன்றி.









PASS THE KET CHUP, DUDE








3 comments:

  1. பயன்மிக்க பதிவு!!

    ReplyDelete
  2. எனது வலையில் இன்று:

    தமிழ்நாடு உருவான வரலாறு

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  3. வாழ்த்துகள்..!!

    ReplyDelete

Kindly post a comment.