Tuesday, October 25, 2011

அவுஸ்.செல்லும் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மனித உரிமை வழக்கறிஞர்கள் அழைப்பு http://www.valampurii.com/online/

பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ‌வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு அந்நாட்டின் மனிதவுரிமை வழக்கறிஞர்கள் சிலர் அழைப்பு விடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரி வித்துள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய அர சியல் தலைவர்களின் மாநாட்டை தமது நாட்டில் நடத்து வதற்கான பரப்புரைகளை மேற்கொள்ள இம்மாநாட்டை அரசாங்கத்தின் தலை வர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வகை கூறும் தன்மை: பொதுநலவாய அமைப்பின் பொதுவான நீதித்தன்மை எனும் தலைப்பில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற கருத்தரங்கில் ஜனா திபதி மகிந்த ராஜபக்­ஷ‌ தலைமையிலான அரசாங்கம் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகப் பேராசிரியர் டாமியன் கிங்ஸ்பெரி தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை பொதுவாக ஏற்றுக் கொள்ள ப்பட்டுள்ளது. மக்கள் செறிந்திருந்த பகுதிகளை இலக்கு வைத்து படைத்தரப்பால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலின் போது இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பா லானவர்கள் உயிரிழந்துள்ளதாக டாமியன் கிங்ஸ்பெரி சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் இப்போரின்போது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த சாட்சியங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்குப் போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இப்போர்க்குற்றங்கள் மற் றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன்னிறுத்தப்படும் வரை இலங்கையைப் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடை நிறுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளதாகவும் அவர் தனது ரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ‌ அந்நாட்டிற்கு விஜயம் செய்யும் போது அவருக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு இக்கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் டாமியன் கிங்ஸ்பெரி உட்பட பலரும் அழைப்பு விடுத்திருந்தனர். இக் கருத்தரங்கில் மலேசியாவின் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான டத்தோ ஜொகாறி அப்துல் மற்றும் மனோகரன் உட்பட மனிதவுரிமைச் செயற்பாட்டா ளர்கள் அவ்வழைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவருமான அட்மிரல் திசார சமரசிங்க பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்கான போதிய சாட்சியங் கள் இருப்பதால் அவரை இலங்கைக்குத் திருப்பியனுப்ப வேண்டும் எனவும் இக் கருத்தரங்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித வுரிமை மீறல்கள் தொடர்பில் அரசு உரியவகையில் பொறுப்புக் கூறாத வரை 2013-ம் ஆண்டு இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.சிலர் அழைப்பு விடுத் துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.