Sunday, October 23, 2011

ஒரு புதிய வரவு பாட்டரியில் இயங்குகிறது. கம்ப்யூட்டர், கரண்ட் எதுவும் தேவையில்லை.

http://thiruppul.blogspot.com/2011/10/blog-post_19.html

பல பழைய நூல்களை என்னுடைய bed scanner மூலம் ஸ்கான் செய்ய நான் படுகின்ற சிரமங்களையும் அதைக் காட்டிலும் அந்த நூல்கள் ஸ்கான் செய்த பின் அட்டைகள் அகன்று பைண்டிங் பிரிந்து பாழாவதையும் கண்டு இரக்கப் பட்டு அடியேன் குமாரத்தி இன்றுஅடியேனுக்கு ஒரு அன்பளிப்பு கொடுத்திருக்கிறாள்,

113749_top

அது ஒரு portablescanner. பாட்டரியில் இயங்குகிறது. கம்ப்யூட்டர், கரண்ட் எதுவும் தேவையில்லை. வீட்டில் வெளியில் என எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று எளிதில் ஸ்கான் செய்யமுடியும். விலை ரூ 6000/- இனி மிகப் பழைய நூல்களை எளிதில் ஸ்கான் செய்து விடலாம். நூல்களை இரவல் தர விரும்பாத நண்பர்கள் வீட்டிலேயே அந்நூல்களை படி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். மெமரி கார்டு, ப்ளூ டூத் usb எனப் பல வசதிகளோடு இருக்கும் இந்த ஸ்கானர் 300 மற்றும் 600 DPI color or black&white options இவைகளுடன் மட்டுமில்லை OCR software உடனும் வருவதால் மிக வசதி. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு !பல நூல்களை xerox எடுக்க வேண்டிய சிரமம் இல்லை. நூலகங்களில் இருந்து நேரடியாக நூல்களை ஸ்கான் செய்து பின் தங்களின் கணிணிகளில் அவர்கள் சேமித்துக் கொள்ளலாம்.

சென்னையில்

M/S Navkar computers,

shop no 511, KAJ Plaza,

FirstFloor, 838, Anna Salai,

(7, narasingapuram street)

Chennai 6000002

என்ற இடத்தில் கிடைக்கிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.