Sunday, October 23, 2011

பாசிட்டிவ் விமன் நெட்வொர்க் கவுசல்யாவிற்கு மதுரா மாமனிதர் விருது

http://www.pwnplus.org/தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து சிறந்த மனிதநேய சேவை செய்யும் ஒருவருக்கு ஆண்டிற்கொருமுறை மதுரா மாமனிதர் விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கமும் மதுராநிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரா நிறுவனம் இந்த போற்றத்தக்க பணியினைச் செய்து வருகின்றது. இதன் மூலம் தங்களது கவுரவம் உயர்வதாகப் பணிவுடன் அதன் நிறுவனர் ஆத்மார்த்தமாகத் தனது வரவேற்புரையின்போது குறிப்பிட்டது அவர் தொடர்ந்து அணிந்துவரும் கதர் வேட்டி சட்டைக்குத் தனி க்வுரவத்தை ஏற்படுத்தியது.

இவ்வாண்டிற்கான விருது வழங்கும் விழா 22-10-2011அன்று பிற்பகல் நான்கு மணியளவில் சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. 2009ல் இந்த விருதினை முதலாவதாகப் பெற்ற நெல்லை மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத் தலைவர் எஸ்.இராமகிருஷ்ணன், நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். 2010ல் இந்த விருதினைப் பெற்ற சென்னை அடையாறு ஸ்ரீமாதா டிரஸ்டின் தலைவரும் நிறுவனருமான வி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

மதுரா மாமனிதர் விருதினை, மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், ”கலைமாமணி” வீ.கே.டி.பாலன் அவர்கள், பாசிட்டிவ் விமன் நெட் வொர்க்கின் தலைவர் கவுசல்யாவிற்கு வழங்கினார்.

கவுசல்யா HIV -யால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவர் ஆறிவரும் மகத்தான மனித சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது. AIDS/HIV யுடன் வாழும் பல்லாயிரக்கணக்கான மகளிர், சிறுவர், ஆகியோருக்கு விழிப்புணர்வூட்டியும், வேலை வாய்ப்புக்களுக்குரிய ஏற்பாடுகள் செய்தும் வருகின்றார் என்பதும் பாராட்டத்தக்கது.

திருமதி கவுசல்யா நாமக்கல் பகுதியச் சார்ந்தவர். 1995ல் திருமணமானது. ஆறுமாதத்திற்குள்ளேயே HIV-ஆல் பாதிக்கப் பட்டார். கணவர் இறந்த பின்னர், உறவினர்களும் கைவிட்டதால் 1997ல் சென்னைக்கு வந்தார். தனக்கு மருத்தவம் பார்த்துக்கொள்ளத் துவங்கினார். அதுசமயம் PWN-ஐயும் ஆரம்பித்தார். தற்பொழுது25000க்கும் மேற்பட்டோர் அதில் இணந்த்துள்ளனர். அனைவருக்கும் தன்னம்ம்பிக்கையூட்டும் நன்னம்ம்பிக்கை நடசத்திரமாகத் திகழ்கின்றார்.

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இஙிலாந்து, இந்தோநேஷியா, கனடா, தாய்லாந்து,ம் நேபாளம், சிர்லங்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று HIV/AIDS பற்றி விளக்கம் பெற்றும், விரிவுரை ஆற்றியும் வெற்றிவாகை சூடியுள்ளார்.

HIV/AIDS குறித்து விழிப்புணர்வூட்டிய முதல் பெண்மணி இவர்தான் என்னும் பெருமைக்குரியவர்.

இவர் ஆற்றிவரும் மகத்தான மனிதா சேவைக்காக் தேசிய அளவிலும் உலகளவிலும் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

அழைப்பிதழ் எதுவும் அச்சிடப்பெறாமல் நிகழ்ந்த விழா. ஆர்ப்பாட்ட அரசியல்வாதிகள் எவரும் பங்குபெறாத விழா. HIV/AIDS -ஆல் பாதிக்கப்பட்டு சமூகத்தால் பட்டும் படாமலும் ஏற்கபபட்டுத் தண்ணீரில் தள்ளாடுகின்ற தாமரைப்ப்பூவினைப்போல் த்தததளித்து வாழ்ந்துவரும் மகளிர் குழாம் தம் தலைவி பெறும் பாராட்டை நேரிற் காண அழைப்பின்றியே வந்திருந்தனர். மதுராவின் பிதாமகன் தனக்குப் பொன்றாத் துணையாகத் திகழ்ந்துவரும் அலுவலக மூத்த ஊழியர்களையும் மேடையில் தனக்குச் சமமாக அமர வைத்து அழகு பாத்தவிழா. அமைச்சர் ஒருவர் இறந்த தகச்வல் வந்தபோதும் காமிராவும் கைப்புத்தகமாகவும் அமச்சர் வீட்டை நோக்கி ஓடிவிடாமல் நிருபர்கள் பங்கேற்ற விழா.

இத்தனைக்கும் மேலாக தலைமை தாங்கியவரைப் பற்றிச் சொல்ல நினைத்தால் நெஞ்சம் ரத்தக் கண்ணீர் வடித்தே தீரும். காரிலிருந்து அவரைத் தூக்கித்தான் நாற்காளியில் வைக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்குக் கீழ் இயக்கமே இருக்காது. சிறு நீர் கழிப்பு டப்பாவும் எபொழுதும் இணைக்கப்பட்டே இருக்கும். ஆனால் அவர் ஆற்றிவரும் அரும்பணிகள் அளவில்லாதன. www.amarseva.org முன்னிலை வகித்தவர் இன்றளவும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளிகளுக்கு உணவு உடை இருப்பிடம் தேவையான அளவு மருந்துவகைகள் வழங்கியுள்ளவர்

இதற்குமேல் எழுத இயலவில்லை. அனைவரது படஙளும் பதிவர்கள் நினைத்தால் இணத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். பொருளோ/உழைப்போ எவ்விததானும் உதவவும் செய்யலாம்.




0 comments:

Post a Comment

Kindly post a comment.