Sunday, October 23, 2011

நாட்டின் வயதான புலி உடல்நலகுறைவால் மரணம்

நாட்டின் மிக அதிக வயதான புலி என்ற பெருமை கொண்ட ரேஷ்மா என்னும் பெண்புலி உடல்நல குறைவால் மரணமடைந்தது. கடந்த 1988-ம் ஆண்டு பிறந்த பெண் புலி ஒன்றிற்கு ரேஷ்மா என பெயரிடப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வனவியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தது.

சாதாராணமாக ஒரு புலியின் சராசரி ஆயுட்காலம் என்பது 14 முதல் 16 ஆண்டுகள் வரை மட்டுமே . ஒரு சில புலிகள் 18 முதல் 19 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இந்த ‌ரேஷ்மா பெண்புலி ஆயுட்காலத்தை தாண்டியும் உயிர் வாழ்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 24 பிறந்தநாளை கொண்டாடியது.

இதனால் நாட்டிலே‌யே அதிக வயதான புலி என்ற நட்சத்திர பெருமையுடன் பார்வையாளர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தது. இந்நிலையில் அதே வனவியல்பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த மற்ற புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் ரேஷ்மா பலத்த காயமடைந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் உடல்நல குறைவு போன்றவற்றால் மரணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மரணமடைந்த ரேஷ்மா வெள்ளை இனத்தை ‌சேர்ந்த வகையாகும். ரேஷ்மா மரணமடைந்ததை அடுத்து இதே பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் வெள்ள‌ை இன புலிகளை டில்லிக்கு இடமாற்றம் செய்ய வனவிலங்கு பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.