ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரம் இல்லாத உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்காக நடந்த தேர்தலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் வெற்றி பெற்றன.
பாதுகாப்பு சபையில் 2 ஆண்டுகள் பாகிஸ்தான் உறுப்பு நாடாக இருக்கும்.
இந்தியா, தனக்கு ஆதரவாக ஒட்டுப்போட்டு இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பாகிஸ்தான் பிரதிநிதி அப்துல்லா உசேன் ஹாரூன் தெரிவித்தார்.
ஓட்டுப்பதிவு ரகசியமாக நடந்தது. பாகிஸ்தான் 129 ஓட்டு்கள் பெற்று வெற்றி அடைந்தது. ஐ.நா. பொதுச்சபையில் மொத்தம் உள்ள 193 நாடுகளில் 129 நாடுகள் பாகிஸ்தானுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இந்தியாவும் இதுபோல நிரந்தரம் இல்லாத உறுப்பினராக இருந்து வருகிறது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.