இவ்வார நடுப்பகுதியில் யேர்மனி தலைநகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்களுடன் யேர்மன் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்து அவர்களுடன் தமிழீழ மக்களின் நிலைகுறித்து ஆராயப்பட்டதுடன் , அவ் விடையத்தில் இந்தியாவின் நிலைகுறித்தும் உரையாடப்பட்டது . |
கடந்த காலங்களாக ஈழத்தமிழர்கள் உரிமைக்காக இந்தியாவில் தேசிய ரீதியில் பல கவனயீர்ப்பு நிகழ்வுகளையும், அமைதி வழிப் போராட்டங்களையும் நாடத்தியது மட்டும் அல்ல,இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை மற்றும் அவர்கள் மீது ஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலை மேற்கொண்டதை கண்டித்து இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா இன்றும் மவுனமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி , இலங்கை பிரச்சினை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும் என்பதை வலியுறுத்தி இந்தியா பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியதும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாஅவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது . குறிகிய நாட்கள் மட்டும் டி .ராஜா அவர்கள் தனது யேர்மனி பயணத்தை மேற்கொண்டாலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பதற்கு தனது நேரத்தை ஒதிக்கி தமிழீழ மக்களின் விடையத்தில் கவனம் காட்டியது பாராட்டுதலுக்குரியது . ஈழத்தமிழர்கள் சார்பாக வித்தியா ஜெயசங்கர் அவர்கள் மதிப்புக்குரிய டி.ராஜா அவர்களுக்கு மலர் வழங்கி நன்றி தெரிவித்ததுடன் தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்பின் பொறுப்பாளர் திரு விராஜ் மென்டிஸ் அவர்கள் டி .ராஜாவுடன் நேர்காணலை மேற்கொண்டார். |
நன்றி |
0 comments:
Post a Comment
Kindly post a comment.