நடனம் ஆடினால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது அமெரிக்காவின் பென்சில்வேனியா நர்சிங் கல்லூரியில் பேராசிரியர் டெரி லிப்மன் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு நடந்தது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் எடுத்துக் கொள்ளப்பட்டு முதற் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது சர்க்கரை நோய் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்தது தெரியவந்தது. அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.
இதுகுறித்து டெரி கூறுகையில்,“குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது.
இதனால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது” என்றார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.