Wednesday, October 26, 2011

60 வயது விதவையைத் திருமணம் செய்து கொண்ட 120 வயது வாலிபர்!

அவரவர் நிலையில் அவரவர் செய்வது சரி என்று ஓர் நீதி உண்டு. அத்தகையதொரு நிகழ்வு அஸ்ஸாமில் நடந்துள்ளது. வாக்களர் பட்டியலின்படி அவருக்கு வயது 116. ஆனால், அவர் தனக்குச் சரியான வயது 120 என்று சொல்கின்றார். . இரண்டு புதல்வர்கள், நான்கு புதல்விகள் பேரன் பேத்திகள் ஆகியோரைச் சேர்த்து அவரது குடும்ப உறுபினர்களின் மொத்த எண்ணிக்கை 122

SALIMA KHATUN- என்ற பெயருடைய முதல் மனைவி 2005-ல் இறந்து விடுகின்றார். அவரது கணவரும் தலைப்பில் குறிப்பிட்டவருமான 120 வாலிபருக்கு ஆறு ஆண்டுகளுக்குப்பின் மறுமணம் செய்துகொள்ளும் ஆசை ஏற்பட்டது. மணமகள் கிடைப்பது மிகவும் கடினமானதொரு செயலாகவே இருந்தது.

ஒருவாறாகத் திரிபுராவின் வடக்கே உள்ள FOOLBARI கிராமத்தில் 60 வயதுடைய SAMOI BIBI என்னும் பெயருடைய மணமகள் கிடைத்தார். அவர் கணவரை இழந்தவர். வாரிசுகள் எவரும் இல்லாதவர். பின்னர் என்ன ? கல்யாணம்தான்.

500 விருந்தினர்கள் முன்னிலையில் ,SATGHORI-ஐச் சேர்ந்த ஹாஜி அப்துல் நூர் மணமக்களிடம் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்டுச் சம்மதத்தையும் பெற்றுத் திருமணத்தை நடத்திவைக்கின்றார். அவர்கள் மொழியில் KUBOOL என்று கேட்டால் சம்மதமா என்று பொருளாம்.

மின்னல் தாக்கி இறந்த ஐந்து பேர், போதையின் உச்சத்தில் சக தோழனையே கொன்ற அண்ணாமலைப் பல்கலக் கழக நிகழ்வு போன்ற அவலச் செய்திகளுக்கு இடையே கிடைதத மகிழ்வான தகவல் என்பதால் இன்றையப் பதிவு. இணையம் முழுவதும் இவையே செய்திகள்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.