Wednesday, October 26, 2011

சாதாரண வீட்டிலேயே கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் மம்தா.!!!



மேற்கு வங்க மாநில முதலமைச்சராக இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எப்போதும் யாரிடத்தும் எந்தவிதப் பரிசுப் பொருள்களையும் பெறுவதே இல்லை.

அரசியலில் நுழைந்தது முதல் கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தப் பழக்கத்தை அவர் விரதமாகவே கடைப்பிடிக்கிறார்.

காளி பூஜை, தீபாவளிப் பண்டிகை ஆகியவற்றையொட்டி தன்னிடம் அளிக்க பரிசுப் பொருள்களுடன் யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம், அவற்றை வாங்கவும் வேண்டாம் என்று வீட்டின் கீழ்தளத்தில் காவலுக்கு நிற்கும் போலீஸôருக்கு கண்டிப்பான உத்தரவை அவர் பிறப்பித்துவிட்டார்.

விலை உயர்ந்த பிஸ்கோத்துகள், வெளிநாட்டுச் சாக்லேட்டுகள், விலைமதிப்பற்ற பேனாக்கள், கலைத்திறன் மிக்க கைவினைப் பொருள்கள் என்று பல்வேறு பரிசுகளைக் கொண்டுவந்து குவிப்பதே பணக்காரர்களின் வழக்கம்.

திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்வில் சேவை செய்துவரும் மம்தா தன்னுடைய சகோதரர்கள், தாயாருடன் சாதாரண வீட்டிலேயே கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறார். எளிய நடுத்தரக் குடும்பப் பெண்கள் அணியும் கைத்தறிச் சேலையைத்தான் உடுத்துகிறார். காலுக்கு அணியும் செருப்புகூட மிகவும் விலை குறைந்ததுதான்.

தலைமைச் செயலகத்தில் முதல்வருடைய அறையைத் தன்னுடைய வசதிக்கு ஏற்ப புதுப்பித்தபோது அந்தச் செலவைக் கூட தன்னுடைய சம்பளத்திலிருந்து கொடுத்தவர் மம்தா.

1 comments:

Kindly post a comment.