Friday, October 28, 2011

13 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி-மதுரை அகல ரயில்பாதைத் திட்டம்

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக ரயிலில் செல்ல வேண்டும். இதற்கு மாற்றாகவும், அதிக ரயில்களை இயக்குவதற்கு வசதியாகவும் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு அருப்புக் கோட்டை வழியாக அகல ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து, மீளவிட்டான், மேல்மருனர், குளத்னர், விளாத்திகுளம், விருது நகர் மாவட்டம் பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர், பாரபட்டி, திருபரங்குன்றம் வழியாக மதுரை வரை மொத்தம் 143.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில்பாதை அமைத்திட 1998-ல் சர்வே எடுக்கப்பட்டது. 16 இடங்களில் ர்யில் நிலையங்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

143.5 கிலோ மீட்டர் தூரத்திற்குப் புதிய அகல ரயில்வேப் பாதையை அமைத்திட நம்மால் இன்றளவும் இயலவில்லை. . முக்கிய நாட்களில் போட்டி போட்டுகொண்டு வாழ்த்துச் செய்திகள் வழங்குவதில் காட்டிடும் அக்கறையை இதில் காட்டாத நம் தலைவர்களை வாழ்த்துவோம்.

1 comments:

Kindly post a comment.