Friday, October 28, 2011

இன்னும் மூன்று நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடி

WPD_India girls


31-10-2011 உலக மக்கள் தொகை நாள். அன்று மக்கள் தொகை 700 கோடியை எட்டுகின்றது. தேசிய அளவில் இந்தியாவில் 1000ம் சிறுவர்களுக்கு 914 சிறுமிகள் என்ற விகிதம் நிலவுகின்றது. பஞ்சாபில் 846 சிறுமிகளாகவும் உள்ளனர்.

உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார காரணங்களுக்காக இந்தியாவில் பெண் சிசு கொலை அதிகம் நடக்கிறது. இதன் காரணமாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் சிறுமிகளின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாடி சான்றிதழும் அளிக்க உள்ளனர், PLAN என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனம். பெண் குழந்தைகளை போற்றும் விதத்தில் இந்த விழா அமையும்.இந்த அமைப்பின் தலைவர் நைஜல் சாப்மேன் தரும் தகவல் இது.

எவ்வளவு தான் நவீன மயமானாலும் ஆண், பெண் மற்றும் இனப்பாகுபாடுகள், பல நாடுகளில் நிறையவே காணப்படுகின்றன. இந்த பாகுபாடுகள் மறைந்தால் தான், பொருளாதாரம் மற்றும் பல துறைகளில் வளர்ச்சி காண முடியும். வளரும் நாடுகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த நாடுகளில் உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி பற்றியோ, கருத்தடை பற்றியோ, எய்ட்சிலிருந்து பாதுகாத்து கொள்ளும் அறிவோ போதிய அளவுக்கு இல்லை.

இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி. எதிர்காலம், இளைஞர்களின் கையில் உள்ளதால், இவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களுக்காக அதிகம் செலவிடப்பட வேண்டும். இது ஐ.நா. மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குநர் பபாதுண்டி ஓசோடைம்ஹின் இவ்வாறு கூறியுள்ளார்.

மலரவிருக்கும் புதிய பூவினை நாமும் நீடுழி வாழ்த்துவோம்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.