Sunday, September 4, 2011

இத்தாலி அரசின் சிக்கனத்திற்கு எதிர்ப்பு புது கரன்சியை வெளியிட்டது உள்ளூர் நிர்வாகம்

http://www.itamil.com/


இத்தாலி அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து, அந்நாட்டின் ஒரு சிறு நகரம் தன்னை விடுதலை அடைந்ததாக அறிவித்து, புதிய கரன்சிகளையும் வெளியிட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இத்தாலி, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் பல்வேறு நிதியுதவிகளைப் பெற்றுள்ளது. அதற்கு ஈடாக, பல நிர்வாகத்தில் பல செலவுகளை அது குறைக்க வேண்டும்.அதன்படி, சிறிய உள்ளூர் நிர்வாகங்களை பெருநகர நிர்வாகங்களுடன் இணைத்து வருகிறது இத்தாலி அரசு. இதற்கு, ப்ரோசினோன் மாகாணத்தைச் சேர்ந்த பிலெட்டினோ என்ற சிறு நகரம், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது
.
மொத்தம் 550 பேர் மட்டும் வாழும் இந்நகரின் நிர்வாகம், ட்ரெவி என்ற அண்டை நகர நிர்வாகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இதனால், நகர மேயர் லுகா செல்லாரியின் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, செல்லாரி, பிலெட்டினோ விடுதலை அடைந்ததாக அறிவித்தார்
.
தொடர்ந்து, "பியோரிட்டோ' என்ற பெயரில் புதிய கரன்சிகளையும் அச்சடித்தார். இந்த கரன்சிகள் உடனடியாக அந்நகரில் புழக்கத்துக்கு விடப்பட்டன. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்தக் கரன்சிகள் வாங்கப்பட்டு வருகின்றன
.
இந்த அதிரடி நடவடிக்கையால், பிலெட்டினோ, ஐரோப்பா, ரஷ்யா முழுவதும் பிரபலமாகி வருகிறது. "ஒருகாலத்தில் இத்தாலி முழுவதும், இதுபோன்ற சுயேச்சை சிறு நகரப் பகுதிகளாகவே இருந்தன. இத்தாலியால் நான்கு பக்கமும் சூழப்பட்டுள்ள சான் மரினோ போன்ற சிறு நாடுகள் இருக்கும் போது, பிலெட்டினோ வாழ முடியாதா?' எனக் கேள்வி எழுப்புகிறார் மேயர் செல்லாரி.


இத்தாலி அரசின் சிக்கனத்திற்கு எதிர்ப்பு புது கரன்சியை வெளியிட்டது உள்ளூர் நிர்வாகம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.