Sunday, September 4, 2011

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு

Bookmark and Shareஅழுத்தம் கொடுக்கக் கூடிய சாத்தியம்
ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்படுவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அதிகாரி லுலியா கொஸ்டா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் பேசப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில நாடுகள் இலங்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
http://globaltamilnews.net/Home/tabid/38/language/ta-IN/Default.aspx
--
 
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.