Sunday, September 4, 2011

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குறைபாடுகள் அம்பலப்படுத்தப்படும்

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குறைபாடுகள் அம்பலப்படுத்தப்படும் - AI

 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குறைபாடுகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அடிப்படை முரண்பாடுகள் மற்றும் குறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குறைபாடுகள், எப்போது இவர்களுக்கு நியாயம் கிட்டும்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
 
ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சர்ச்சை நிலவி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிடப்படுவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
தமது தரப்பு சாட்சியங்களை முன்வைக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச அனர்த்தகுழு ஆகியவற்றுக்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இந்த அழைப்பினை குறித்த மூன்று அமைப்புக்களுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
http://globaltamilnews.net/Home/tabid/38/language/ta-IN/Default.aspx
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.