Sunday, September 4, 2011

மின் குழுமம் ஒரு பார்வை- -முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர்.துரைமணிகண்டன்,  ”இணையமும்  தமிழும்,” “ இணையத்தில்  தமிழ்வலைப் பூக்கள்,”  ஆகிய  இரு  நூல்களை  எழுதியுள்ளார். இவர்  எழுதி  முடித்துள்ள  

”இணையத்தில்  செம்மொழித் தமிழ்  தரவு  தளங்கள்”  என்னும் புதிய  நூல் அச்சில் உள்ளது. ”மின் குழுமம் ஓர்  பார்வை” என்ற  கட்டுரை  தேனி. எம்.சுப்பிரமணி நடத்துகின்ற  இணைய  இதழான முத்துக்கமலத்திற்காக எழுதப்பட்டது. 

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து  நடத்தப்பட்டு வரும் இதழ் என்ற பெருமைக்குரியது. ”முத்துக்கமலம்”

http://www.muthukamalam.com/homepage.htm

தொடக்கக் காலத்தில் மனிதன், மற்றொருவனுக்கு ஒலி எழுப்பித் தன் கருத்தைத் தெரிவித்தான். இந்த ஒலிகளில் செய்யப்பட்ட ஏற்ற இறக்க முறை மொழியாக உருவானது. இந்த மொழி ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்த இனக்குழுவிற்கும் வேறுபட்டது. இந்த மொழி துவங்கப்பட்ட போதே தகவல் தொடர்பும் துவங்கி விட்டது. கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இயல், இசை நாடகங்கள் போன்றவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தத் தகவல் தொடர்பு குறிப்பிட்ட குழுக்களுக்கானதாக இருந்தது. இதுவே அறிவியல் வளர்ச்சியின் வேகத்தில் புத்தகம், பத்திரிகை, திரைப்படம் என்று தனது எல்லையை சற்றி விரிவாக்கியது. இப்போது இணையம் எனும் புது வலைப்பின்னல் மூலம் உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கிக் கொண்டு விட்டது.

இந்த இணையத்தில் குறிப்பிட்ட கருத்துக்களை உடையவர்கள், குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருபவர்கள் என்று குறிப்பிட்ட ஏதாவது ஒன்றை மையமாகக் கொண்டு ஒரு குழுவாக இணைந்து அவர்களுக்குள் ஒரு கலந்துரையாடலை இணையத்தின் வழியே எழுத்துக்களின் மூலம் பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட முறைதான் குழுமங்கள். இந்தக் குழுமங்களில் அங்கத்தினராகிக் கொள்பவர்களுக்கிடையே மட்டும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களால் வெளிப்படுத்தும் தகவல்கள் இந்தக் குழுமத்திற்கான இணையப் பக்கங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதே கருத்து குறித்த தகவல்களை இணையத் தேடுபொறிகளில் மற்றவர்கள் தேடும் பொழுது அவர்களுக்கும் இந்த கருத்துக்கள் காணக் கிடைக்கின்றன. இப்படி கருத்தொற்றுமையால் இந்தக் குழுமங்களில் புதிய அங்கத்தினர்கள் இணைந்து விடுகின்றனர். இப்படி இந்தக் குழுமம் விரிவடைந்து கொண்டே செல்கிறது

தமிழ்க் குழுமங்கள்

தமிழ் மொழியிலும் இப்படி சில குழுமங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழுமங்கள் அமைப்பதற்கான வசதிகளை மின்னஞ்சல் வசதிகளை வழங்கி வரும் சில இணையதள நிறுவனங்கள் இலவசமாகவே அளிக்கின்றன.
1. மின் தமிழ் குழுமம்
2. அன்புடன் குழுமம்
3. அழகி குழுமம்
4. கீற்று குழுமம்
5. நம்பிக்கை குழுமம்
6. தமிழ் விக்சனரி குழுமம்
7. தமிழ்-நண்பர்கள்(தமிழ் நண்பர்கள் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது.)
8. தமிழன்ஸ்2
9. தமிழ்மன்றம்_பி.எஸ்.ஜி
10. தமிழ்மிட்பைல்ஸ்
11. தமிழ் முஸ்லீம்
12. தமிழ்ச்சங்கம் (தமிழ்சங்கம் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது.)
13. தமிழ்ச்சங்கம்_பிட்ஸ்கோவா
14. தமிழ்ப் பாடல்கள்
15. தமிழ்ஸ்டார்ஸ்
16. தமிழ்-உலகம்
17. தினம் ஒரு கவிதை
18. டி.எம்.ஓ. நண்பர்கள்
19. துக்ளக்
20. துவக்கு
21. உலகத்தமிழ்
22. யங்தண்டர்ஸ்
23. தமிழ்_குழு (தமிழ்க் குழு என்று தனியாகவும் ஒன்று உள்ளது.)
24. தமிழ் கவிதை
25. தமிழ் கிறுக்கல்கள்
26. தமிழ் மீடியா
27. தமிழ் கம்ப்யூட்டர்
28. தமிழ் என்சைக்ளோபீடியா

இவற்றில் கூக்ளி நிறுவனத்தின் மின்னஞ்சல் வசதி அளிக்கும் ஜி-மெயில் எனும் அமைப்பில் அதிக அங்கத்தினர்களைக் கொண்டதாக ஆறு மின் குழுமங்கள் இருக்கின்றன. அவை,

1. மின் தமிழ் குழுமம்
2. அன்புடன் குழுமம்
3. அழகி குழுமம்
4. கீற்று குழுமம்
5. நம்பிக்கை குழுமம்
6. தமிழ் விக்சனரி குழுமம்
 
மின் தமிழ் குழுமம்
மின் தமிழ் குழுமம் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் 2006 ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமை இடம் தென்கொரியாவாகும். இதனைத் தொடங்கியவர் தமிழ் மரபு அரக்கட்டளையின் தலைவர் திரு. நா.கண்ணன் ஆவார். இவருக்கு ஜெர்மனியைச் சார்ந்த திருமதி சுபாசினி அவர்கள் இக் குழுமம் அமைய உதவினார்.

இம்மின் குழுவில் தமிழ் மரபு சார்ந்த விடயங்களான ஓலைச்சுவடிகள், பழங்கால சிறப்பு மிக்க புராண இதிகாசப் பேழைகள் மற்றும் அரிதான புகைப்படங்கள், அறிவு சார்ந்த இலக்கிய, இலக்கணங்கள் போன்றவைகள் கலந்துரையாடப்படுகின்றன.

இந்தக் குழுமத்தில் இதுவரை 612 பேர் அங்கத்தினராகி உள்ளனர். இவர்கள் மூலம் இக்குழுமத்தில் 15660 செய்திகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இக்குழுமத்தின் கருத்துக்களை 90000 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த மின் தமிழ் குழுமத்தில் அதிகமாக எழுதுபவர்களில் இதன் தலைவர் நா.கண்ணன், சுபாசினி, முனைவர் இளங்கோவன், முனைவர் தி. நெடுஞ்செழியன், முனைவர். துரை.மணிகண்டன், தமிழ்த்தேனீ ஆகியோர் குறிப்பிடத்தக்கவராக இருக்கின்றனர். இவர்கள் இங்கு அதிகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்
.

அன்புடன் குழுமம்
அன்புடன் குழுமம் யுனித்தமிழில் மட்டுமே இயங்க வல்லது. இதனை உருவாக்கியவர் கனடாவைச் சேர்ந்த திரு புகாரி ஆவார். இக்குழுமம் 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் நாள் திங்கள் கிழமைத் தொடங்கப்பட்டுள்ளது.

இக்குழுமத்தில் தமிழ் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்ற ஆக்கப்பூர்வமானத் தலைப்புகளில் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.


இக்குழுமத்தில் இதுவரை 1266 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 78 அங்கத்தினர்கள் மட்டும் அதிகமாக எழுதுகின்றனர். இக்குழுமத்தில் ஒரு லட்சம் மடல்களைத் தாண்டி கருத்தாடல்கள் நடந்துள்ளது. தொடர்ந்து நடந்தும் வருகின்றன. இதில் எழுதுபவர்களில் புகாரி, பூங்குழலி, வேந்தன் அரசு, வாணி, விசாலம், கிரிஜா மணாளன் போன்றோர்கள் குறிப்பிடக் கூடியவர்கள்
அழகி குழுமம்
.

அழகி குழுமத்தை உருவாக்கியவர் திரு.விஸ்வநாதன் ஆவார். சென்னையிலிருந்து இக்குழுமம் செயல்படுகிறது.

தமிழ் மொழி பெயர்ப்பு, தமிழில் விசைப்பலகையின் செயல்பாடு, தமிழில் அச்செடுக்கும் வழிமுறைகள், இணையம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் இங்கே விடை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 730 உறுப்பினர்கள் உள்ளனர். இதைல் 25 உறுப்பினர்கள் அதிகமாக எழுதி வருகின்றனர். அழகி குழுமத்தில் எழுதுபவர்களில் விஸ்வநாதன், ராகவன், தமிழ்த்தேனீ திரு.அன்பன், முனைவர். துரை. மணிகண்டன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர்
.
கீற்று குழுமம்


கீற்று குழுமம் கீற்று ஆர்குட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.

கீற்று குழுமத்தில் அதிகமாக பகுத்தறிவுச் சிந்தனைகள் அலசி ஆராயப்படுகின்றன. ஒப்பற்ற சுயசிந்தனையைத் தூண்டும் களமாகவும் இது செயல்படுகிறது. இதில் கீற்று இணைய இதழில் வெளியான படைப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது
.

இதில் 319 உறுப்பினர்கள் உள்ளனர். இத் தளம் கீற்று இணைய இதழ் வாசகர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் இடையில் ஒரு பாலமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் மகிழ்னன், கலா போன்றவர்கள் அதிகமாக எழுதுகின்றனர்.
நம்பிக்கை குழுமம்
நம்பிக்கைக் குழுமம் 2005 ஆம் ஆண்டு ஏப்பரல் 23 நாள் தொடங்கப்பட்டுள்ளது.

இக்குழுமத்தில் இறை நம்பிக்கையும், ஆன்மீகச் செய்திகளும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. பக்தி தொடர்பான செய்திகளும், தேவாரத் திருமுறைகளும், அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற இந்து மதக் கருத்துக்களை வலியுறுத்தும் செய்திகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நம்பிக்கை குழுமத்தில் சங்கர்குரு, விஜி சுதன், விசாலம்ராமன் சாதுக்கள், யோகிகள் போன்றவர்கள் அதிகம் எழுதுபவர்களாக இருக்கின்றனர்.
தமிழ் விக்சனரி குழுமம்

இக்குழுமம் தமிழ் விக்கிபீடியாவுடனும், தமிழ் விக்சனரி தளத்துடனும் சேர்ந்து உருவாக்கப்பட்ட குழுமம் ஆகும்.

தமிழ் கலைச் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு உரையாடல்கள் போன்றவை முக்கியமானதாகக் கொண்டு இக்குழுமம் இயங்குகிறது.

விக்சனரி குழுமத்தில் 120 உறுப்பினர்கள் உள்ளனர். பத்து பேர் அதிகமாக எழுதுகின்றனர். விக்சனரி குழுமத்தில் மயூரன், செல்வா, சத்தியா, ரவிசங்கர், முனைவர். துரை.மணிகண்டன் போன்றவர்கள் எழுதுகின்றனர்.
 
பயன்பாடுகள்

1. இக்குழுமங்களின் மூலம் நாம் கலந்துரையாட முடிகிறது.
2. இங்கே நாகரிகமான விடயங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
3. விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றிற்கு இங்கே அனுமதி இல்லை.
4. தமிழ் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள், இலக்கண இலக்கியச் செய்திகள், கணிப்பொறி சார்ந்த செய்திகள் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.
மேற்காணும் குழுமங்கள் தவிர வேறு சில பெயர்களிலும் தமிழ் குழுமங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளும் பல கருத்துக்களை குழு உறுப்பினர்களுக்குள் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பல சந்தேகங்களுக்கு இந்தக் குழுமங்கள் எழுத்து மூலமாகவே விடை தந்து கொண்டிருப்பதுடன் ஒத்த கருத்துக்களை உடையவர்களிடையே நட்பை உருவாக்கும் தளமாகவும் இந்தக் குழுமங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
      http://www.muthukamalam.com/homepage.htm
 


முத்துக்கமலம் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய நூல்கள்

             
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.