Saturday, September 24, 2011

தொடருமா வைராக்கியம் திருமா அவர்களே ?

"தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளும் தோழமை கட்சிகளை மதிக்காமல் மேலாதிக்க மன நிலையில் கூட்டணி கட்சிகளை புறக்கணிக்கிறது. தேவைபடும் போது பயன்படுத்திக் கொள்வது. பின்னர் உதறி தள்ளுவதுமான போக்குகளை இந்த 2 கட்சிகளும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன.
கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகின்றனர். தோழமை கட்சிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெளியேற்றுவது இரு திராவிட கட்சிகளும் ஏகாதி பத்திய மன நிலையை காட்டுகிறது.

தி.மு.க.-அ.தி.மு.க. தங்கள் கட்சி நலன் அடிப்படையில் இது போன்ற முடிவை எடுத்து அறிவிப்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் நாகரீகமான முறையில் எங்களை போன்று வளர்ந்து வரும் கட்சிகளை வழியனுப்பியிருக்கலாம். அதற்கு மாறாக தனித்து போட்டி என்று அறிவித்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இந்த சூழலில் பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது ஒரு வரலாற்று தேவையாக உள்ளது. அதனால்தான் அழைப்பு விடுத்துள்ளேன்.இவர்களின் பதிலுக்காக 2 நாள் காத்திருக்கிறோம். ஓரணியில் சேர வாய்ப்பு இல்லையென்றால் எங்களது வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம்."

கூட்டணிக்கு மாற்றானதோர் அரசியல் தீர்வைக் கொண்டுவரும் காலக் கட்டம் நெருங்கிவிட்டது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைக் கொண்டுவருவதற்காகப் பாடுபடுங்களேன். அதற்கு ஒத்துழைப்பவரோடு மட்டும்தான் உள்ளாட்சித் தேர்தலில் உடன்பாடு என்று கோரிக்கை வையுங்கள்.

யாரும் மேலாதிக்க மனப்பான்மையோடு யாரையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. யாருடைய சுயகெள்ரவமும் எச்சூழலிலும் பாதிக்கப்படாது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தலில் தனிநபருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இல்லாமற் போகும்.

கூட்டணிக்கே அவசியமில்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். சரிதானே ?

வேறு வாய்ப்பே இல்லை என்ற நிலையில்தானே இந்த இரு நாள் அவகாச அறிவிப்பு , கூட்டணி இல்லாக் கட்சிகளுக்கு ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.