Sunday, September 25, 2011

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக போட்டியிடும் மாற்றுத்திறனாளி எம்.ஆர்.சௌந்தரராஜன்

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் அரசு வேலையைத் துறந்து வேட்பாளராக களமிறங்குகிறார் எம்.ஆர். சௌந்தரராஜன் என்கிற மாற்றுத்திறனாளி.

சிறு வயது முதல் சைக்கிள் விளையாட்டில் ஆர்வம்கொண்டிருந்தவர் . இடையில் ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்டு வலது கால் முட்டிற்குக் கீழ் செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. ஆனாலும் விளையாட்டின் மீது தீராத ஆர்வம் இருந்து வந்தது. இதன் காரணமாக தேசிய, மாநில, சர்வதேச அளவிலான சைக்கிள் போட்டிகளில்பங்கேற்றுப் பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார்.

பட்டதாரியான இவருக்கு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அரசின் சமூக நலத்துறையில் பணி கிடைத்தது. கடந்த 19 ஆண்டுகளாக அத்துறையில் பணியாற்றி வர்கின்றார். ஆயினும் சிறு வயது முதல் அரசியல் மீது ஆர்வம் இருந்து வந்த ஆர்வம் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபின் வெளிப்பட்டிருக்கின்றது.

எனவே, தற்போது வேலையை ராஜினாமா செய்து தேர்தலில் களமிறங்கியிருக்கின்றார். சென்னை மேயரை
நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசு மக்களுக்கு அளித்துள்ளது. இத்தருணத்தில் தேர்தலில் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற விரும்புகின்றார்.

சென்னை மாநகரை பொருத்த வரை வளர்ச்சி பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. நான் மேயராகும் வாய்ப்பு கிடைத்தால் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும், மேலும் மாநகராட்சி அமைப்பில் மக்கள் குழுவை ஏற்படுத்தி வளர்ச்சி பணிகள் கண்காணிக்கப்படும்.

நான் மாற்றுத்திறனாளி என்பதால் அவர்களின் பிரச்னை என்ன என்பதை அறிவேன் அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். குடிநீர், கழிவு நீர் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணி,சாலைப் பணி,மழைக்கால பிரச்னை,வரி விதித்தல்,பாலம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் தொடர்பாக மக்களின் கருத்து கேட்டு தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இரு பெரும் திராவிட இயக்கங்களும், மற்றக் கட்சிகளும் தத்தம் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு இவரைப் போட்டி இன்றி மேயராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழலில் தடம்பதிக்காத, வேறு எத்தகைய ஊழல்களிலும் சம்பந்தப்படாத, எந்தச் சூழலிலும் தன்னம்பிக்கை இழக்காத (உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி அண்மைய உதாரணம்) தோழர். தா.பாண்டியன் இதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.