Monday, September 26, 2011

நாகை மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் வெறிச்செயல்!



இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான வேதாரண்யம் மீனவர்கள் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர்கள் மு. ஜெயபால், க. வீரமணி, சுந்தரமூர்த்தி. மூவரும் புஷ்பவனத்திலிருந்து கண்ணாடி இழைப் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்றனர். அன்று இரவு சுமார் 11 மணியளவில் வேதாரண்யத்துக்குக் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு படகில் வந்த இலங்கைக் கடற் படை யி னரில் இருவர், அவர்களின் படகில் ஏறி இரும்புக் கம்பியைக் கொண்டு மீனவர்களைத் தாக்கியுள்ளனர். தலையில் ஐஸ் கட்டிகளை வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்த ஐஸ் கட்டிகளைப் எடுத்து அதை மீனவர்களின் தலையில் வெகு நேரம் வைத்தும் துன்புறுத்தியுள் ளனர். இதனைத்தொடர்ந்து மயங்கிய நிலையில் சனிக்கிழமை கரைக்கு திரும்பிய மீன வர்கள் மூன்று பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதில் ஜெயபால் தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தகவல் அறிந்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், மக்க ள வை உறுப்பினர் ஓ.எஸ். மணியன், சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி. காம ராஜ் உள்ளிட்டோர் வேதாரண்யம் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப் பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தி, ஆறுதல் கூறினர்.இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலை யத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.