Saturday, September 3, 2011

இந்தோனேசீய கரன்சி நோட்டில் விநாயகர்


  IST

 


 நன்றி:தினமலர்


 
 
 
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சில ஆண்டுகளுக்கு ஒரு கரன்சி நோட்டு வெளியிடப்பட்டது. 20 ஆயிரம் ரூப்பியா ( இந்திய மதிப்பில் 84 ரூபாய்) மதிப்பிலான இந்த கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் இருப்பதுதான் அதிசயம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனீசியாவில் கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் இருப்பது உண்மையிலேயே வியப்பிற்குரியதுதானே.


இந்தோனீசியாவின் ஒரு பகுதியான ஜாவா தீவில் பழங்காலத்தில் இருந்த மன்னர்கள் சைவம்- பவுத்தம் இரண்டையும் வளர்த்தவர்கள். ஜாவாவில் ப்ராம்பானான் என்ற இடத்தில் ஆயிரம் கோயில்கள் இருந்தன. பின்னர் பல ஆட்சிகள் மாறி சுகார்த்தோ ஆட்சிக்கு வந்தபோது, இந்தோனீசியா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அப்போது அதற்கு பரிகாரமாக கணேசரின் உருவத்தை கரன்சி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தியது வீரியம் மிக்க பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த தகவலை டாக்டர் எஸ்.ஜெயபாரதி தெரிவித்துள்ளார்.


இந்தோனீசியாவின் பாட்டம் தீவில் உள்ள லலித திரிபுரா சுந்தரி அம்மன் கோயிலில் செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஆதி விநாயகர் சந்நிதியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



- இந்தோனீசியாவிலிருந்து எம்.ஜி. அறிவரசன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.