Saturday, September 3, 2011

வெளியிடப்பட்டது மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் -

வெளியானது மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் -  ஏழை ஏ.கே.அந்தோணி .. பணக்காரர் கமல்நாத்..

 ஏழை ஏ.கே.அந்தோணி .. பணக்காரர் கமல்நாத்.
.
மத்திய அமைச்சர்களின் சொத்துவிவரத்தை பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது ..18 மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துமதிப்புகளை வெளியிடவில்லை

அதிக பட்சமாக நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத்துக்கு 263 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 11 கோடி ரூபாயும், அவரது மனைவி நளினிக்கு 12.8 கோடி ரூபாயும் சொத்து உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு 1.8 கோடி ரூபாயும், மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், மு.க.அழகிரி ஆகியோருக்கு தலா ரூபாய் 30 கோடி மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளதாக அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாருக்கு 12 கோடி ரூபாயும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவுக்கு 15.2 கோடி ரூபாயும் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களிலேயே மிகக்குறைந்த அளவு சொத்து உள்ளவர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணிதான்அவரது சொத்து மதிப்பு 1.8 லட்சம் ரூபாயாகவும், அவரது மனைவியின் சொத்து மதிப்பு 30 லட்சம் ஆகவும் உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு 4.8 கோடி ரூபாய் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல முறை பிரதமர் அலுவலகத்தில் இருந்து வலியுறுத்தப் பட்ட பின்னரும், 18 மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துமதிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.