Saturday, September 3, 2011

30 வருடங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினையும் ஐக்கிய நாடுகள் சபையும் - ஒரு பார்வை


ban ki moon
இலங்கையில் அந்த நாட்டு அரசுகளால் தமிழர்கள் பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். நீண்ட நோக்கில் ஓர் மிகப்பெரும் இனவழிப்பு நடவடிக்கைக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றது. இலங்கையில் நடப்பது ஓர் இனப்படுகொலைதான் என தமிழர்களில் சிலர் துணிந்து கூற வெட்கமாக இருப்பதாக கூறுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது இது ஒரு புறம் இருக்க இந்த கட்டுரையில் ஐக்கிய  நாடுகளின் தலையீடுகள் ஈழத்தமிழர் விவகாரங்களில் எந்தளவு தாக்கத்தை காலத்திற்கு காலம் ஏற்படுத்தி வந்துள்ளது என்பதனைப்பார்ப்போம்.
.
1983 ஆம் ஆண்டே இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பில் ஐ. நா. வில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்றில் இருந்து இன்றுவரை காலத்திற்கு காலம் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை விடுவதும் தீர்மானங்கள் இயற்றுவதனையும் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. சுருக்கமாக கூறினால் எவ்வாறு தமிழர் பிரச்சினைக்கு மூல காரணமாக பிரித்தானிய ஆட்சியாளர் இருந்தார்களோ அது போலவே ஐக்கிய நாடுகளும் ஆகும்.  1983 ஆம் ஆண்டில் இலங்கை பிரச்சினை தொடர்பில் உருவாக்கபப்ட்ட ஓர் ஐ. நா. வின் உப குழு சில தீர்க்கமான நடவடிகைகளை எடுத்திருந்தால் இந்தளவு காலம் ஈழத்தமிழர் இன்னல்கள் தொடர்ந்திருக்காது.
.
1983 இல்  செப்டம்பர் மதம் 5 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவில் மனித உரிமை கூட்டத்தில் இலங்கைப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து சில தீர்மானங்களை நிறைவேற்றியது.
.
அதில் 1. ஐக்கிய நாடுகள் செயலாளர் இலங்கையி அரசாங்கத்தினை அழைத்து நடந்து முடிந்த  யூலை கலவரம் தொடர்பில் விசாரிக்கவேண்டும். 2 வது இலங்கையில் நடந்த வன்செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக ஆராயவேண்டும். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது??
.
Koffi anan
யூலைக்கலவரம் நடப்பதற்கு முன்னரே அவ்வாறான ஒரு ஆபத்து வரப்போகின்றது என்பதனை ஐக்கிய நாடுகள் சபை உட்பட அப்போதைய ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் பலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். எடுத்துக்காட்டாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த பேராசிரியர் லிய்யோ கூப்பர் என்பவர் தனது இனப்படுகொலையினை தடுத்தல் என்ற ஆய்வில் கூறும் போது தான் 1982 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்களவர்க்கும் தமிழர்க்கும் பாரிய மோதல் இடம்பெறும் என எச்சரித்ததாக கூறியுள்ளார். ஆனால் இதுபற்றி ஐ. நா வோ அலது வேறு யாரும் கவனத்தில் கொள்ளவில்லை விளைவு கறுப்பு யூலை.
.
1984  ஐ. நா. மனித உரிமை கூட்டத்தொடர்: கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடந்து முடிந்து ஆறு மாதங்களின் பின்னர் ஜெனீவாவில் கூடிய மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கை வாசித்த மனித உரிமை சபை உப குழுவின் உறுப்பினர் (The Sub-Commission on the Prevention of Discrimination and Protection of Minorities) திரு ஆர். சி. பண்டாரி ( இந்தியா) அவர்கள் தனது அறிக்கையில் இலங்கையில் எந்தவகையான முன்னேற்றமும் இல்லை. அங்கு படுகொலைகள் குடியேற்றங்கள் தொடர்கின்றது எனவும்  அரசியல் தீர்விற்கான அனைத்துக்கட்சி குழு எதனையும் செய்வதாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். மட்டுமன்றி இலங்கையில் தமிழர்க்கு நடப்பது கட்டம் கட்டமான ஒரு திட்டமிடப்பட்ட இன அழிப்பே (Concerted Plan of Genocide) என்றார். அதுமட்டுமன்றி  தீர்விற்கான முயற்சிகள் வன்முறையற்ற பாதையில் இருக்கவேண்டுமே தவிர அரச பயங்கரவாத ( State Terorism) அணுகுமுறைகள் மூலம் வருவதனை நியாயப்படுத்த முடியாது எனவும் கூறின்னர். ஆனால் இன்றும் சிங்கள அரசாங்கம் அப்படித்தான் செய்கின்றது.
.
1985 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற மனித உரிமை கூட்டத்தொடரில் பல சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் மீதான வன்முறைகள், ஆட்கடத்தல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்தன. இதில் முக்கியமானது ICJ ( International Commission of Jurists), அனைத்துலக மன்னிப்பு சபை உட்பட பல உலக அமைப்புக்களின் அறிக்கை ஆகும். ஆனால் இந்த அறிக்கைகளை வாசித்ததும் அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் ஓர் பதில் அறிக்கை சமர்ப்பித்ததும் அந்த ஆண்டு அமர்வு முடிந்துவிட்டது.
.
இன்று அரசாங்கம் சனல் 4 காணொளிக்கும், ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கும் எப்படி பதில் அளித்ததோ அதே பாணியில்தான் 1985 ஆம் ஆண்டும் பதில் அளித்திருந்தது. 1985 ஆம் ஆண்டு சிங்கள இராணுவம் மீதான குற்றச்சாட்டிற்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறு பதில் அளித்திருந்தது என்பதனைப்பார்க்க "In replying this allegation, my delegation will also deal with the accusations made by the representative of Amnesty International. We categorically deny that the army has been used for extra-judicial killings. When however members of the armed services have been guilty of misconduct or excesses in the course of duty the Government of Sri Lanka has taken prompt and severe action. I have before me a list of instances where the Government has punished members of the security forces after investigations were conducted by senior officers into complaints of conduct prejudicial to good order and military discipline" சுருங்க கூறின்; இலங்கை அரசாங்கம் எமது படையினர் மீதான குற்றச்சாட்டை மறுக்கின்றோம். அவ்வாறு ஏதும் குற்றங்கள் இருக்கும் போது நாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என மறுத்திருந்தது.
.
1985 ஆம் ஆண்டு இலங்கை மீதான தீர்மானம் தோற்கடிப்பில் சீனா
.
1985 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தொடரில் திம்பு பேச்சை ஆதரித்தும் அதே வேளை அந்த வேளையில் இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட படுகொலைகளை கண்டித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உப குழு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது. (Draft Resolution on Sri Lanka (L65) 1985) இந்த தீர்மானம் சாம்பியா, ரொமானியா, உட்பட பல ஆபிரிக்க நாடுகளின் துணையுடன் சீனாவும் சேர்ந்து தோற்கடித்தது. அது மட்டுமன்றி சீனா இன்னொமொரு கருத்தை அப்போதே கூறியது அதாவது அமெரிக்கா தலையிடக்கூடாது எனவும் கூறியது.
boutros-boutros-ghali
UN SG in 1985 Boutros-Boutros-Ghali
.
1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அமர்வில் இலங்கையில் இடம்பெற்றுவரும் காணாமல் போதல்கள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பில் கண்டனங்கள்  விவாதங்கள் நடந்தன. இதன்போது ஐக்கிய நாடுகளுக்கான கனடா தூதர் ரெய்னல் அன்ட்ரேசுக் என்பவர் இலங்கை அரசாங்கம் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கூறினார்.
.
மேற்கண்டவாறு 1983 இல் இருந்து 2006 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் 20 அமர்வுகளில் ஈழத்தமிழர் பிரச்சினைகள், உரிமைகள் பற்றி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இனப்படுகொலை, இனவழிப்பு, அரச பயங்கரவாதம் என்ற கருத்துக்கள் ஆழமாக பார்க்கப்பட்டு அவைதான் இலங்கையில் நடக்கின்றது எனவும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் கானல் நீராக ஒவ்வொரு தடவையும் சென்றுவிடும்.
.
தற்போது மீண்டும் ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர் பிரச்சினையில்  தலை காட்டுமால் போல் உள்ளது. இந்த மாதம் 12 ஆம் திகதியில் இருந்து என்ன நடக்கப்போக்ன்றது 2009  இல் நடந்தது போன்று மீண்டும் தீர்மானம் எதுவும் வந்தால் தோர்க்கடிக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி உமை

0 comments:

Post a Comment

Kindly post a comment.