Saturday, September 3, 2011

தாய்ப்பால் ஐஸ்கிரீமும், தாய்ப்பால் சிறப்புக்களும் தாய்ப்பால் வங்கியும்



தாய்ப்பாலில்  இருந்து  தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்  பேபிகாகா (BABY GAGA)  என்னும்  பெயரில் லண்டனில். விற்பனைக்கு  வந்துள்ளது.

இரத்த வங்கியைப்  பற்றி  மட்டும்தான்  பலர்  கேள்விப் பட்டிருப்போம். ஆனால், பல் ஸ்டெம் வங்கி,  நஞ்சுக் கொடி ரத்தம்,  மாதவிலக்கு ரத்தம்  இவற்றிற்கெல்லாம் கூட  வங்கிகள்  இருக்கின்றன. சென்னையிலும்  உள்ளன. தாய்ப்பாலுக்கான  வங்கி மட்டும்தான்  சென்னையில்  இன்னும் வரவில்லை. இவை குறித்த முழுத்  தகவல்களும்  திரட்டியபின் தனியாக  அவற்றைப்பற்றி எழுதுவேன்.

தற்பொழுது  தாய்ப்பாலின்  சிறப்புக்களை மட்டும்  பார்ப்போம். தாய்ப்பாலில்  நினைவாற்றலை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் உள்ளன. நாற்பது விதமான  புற்று நோய்  செல்களை மட்டுமே கொல்லக்கூடிய தன்மை தய்ப்பாலுக்கு உண்டு. அந்தப்  பொருளுக்கு ஹாம்லெட் என்று பெயரிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின்  வில்ட்ஷையரைச் சேர்ந்தவர், டிம்பிரவுன். பெர்ங்குடல்  புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால்,  புற்ரு நோய்  கல்லீரல்  மட்டும்  இதர பகுதிகளுக்கும் பரவியது. மருத்துவர்கள்  இயலாது  என்று கைவிட்டு விட்டனர். அப்போது தொலைக்காட்சியைப்  பார்க்கும் பொழுது ஒரு தகவல்  கிடைக்கின்றது. குழந்தை பெற்றிருந்த மகள்,  புற்று நோய்க்கு உள்ளாயிருந்த தந்தைக்குத்  தன் தாய்ப்பாலைக்  கொடுத்து வந்த்தால்,  தந்தையின்  புற்று நோய் குணமானதைத்  தெரிவிக்கின்றார். இவரும்  தாய்ப்பால்  அருந்தி  புற்றுநோயினின்றும் குணமடைகின்றார்.

தாய்ப்பால்  சேகரிப்பு  குறித்த பல்வேறு  செய்திகளைத்  தெரிந்துகொள்ளவேண்டுமா?  ARIENE EISEN BERG, HEIDI.E.MURKOFF  மற்றும், SANDEE E.HATHAWAY B.S.N.  ஆகியோர் எழுதிய  WHAT TO EXPECT THE FIRST YEAR என்ற புத்தகத்தைப்  படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

தாய்ப்பால்  குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்  வாய்ப்புக்  குறைவு. பால்  கொடுக்கும்  தாய்க்கு டைப்2 நீரிழிவு நோய்  வாய்ப்புக்  குறைகின்றது.பசுவின் பால்  ஆட்டுப்பாலைவிட் தாய்ப்பாலில் புரதம்  அளவு குறைவு.  கொழுப்பின்  அளவும்  குறைவு

எட்டு ஆண்டுகளுக்கும்  மேலாக உள்ளம் உடல் உணவு  சார்ந்த விழிப்புணர்வு  மாத  இதழாக வந்து கொண்டிருக்கின்றது, டயட் புட் என்ற மாத இதழ். அதில் சாய்.வைத்தியநாத் என்பவர் எழுதிய கட்டுரையின்  அடிப்படையில் இது எழுதப்பட்டது. அவர்களது 

தொடர்பு எண் 2664 0530,  2664  0533

e mail  thedietfood@rediffmail.com. 

0 comments:

Post a Comment

Kindly post a comment.